மருத்துவம் :: சில நோயியங்கள்
1. ஆல்பிரைட் நோயியம் என்றால் என்ன?
எலும்பு நார் பிறழ்வளர்ச்சி, தோல் நிறமாதல், பெண்களிடம் பால் உணர்வு முன்னரே ஏற்படுதல்.
2. ஆல்போர்ட் நோயியம் என்றால் என்ன?
ஒரு பரம்பரைக் கோளாறு. நரம்புச் செவிடு, நரம்பழற்சி முதலியவை இருக்கும்.
3. போராவி நோயியம் என்றால் என்ன?
உணவுக்குழாய் தானாகவே தெறித்தல்.
4. பிரவுன் செக்குவார்டு நோயியம் என்றால் என்ன?
ஒரு பக்கவாத நோய். மூட்டு இயக்க உணர்ச்சி இராது. வலியுணர்ச்சியும் வெப்ப உணர்ச்சியும் இரா.
5. காஃபே நோயியம் என்றால் என்ன?
இளம்பிள்ளை மூளைப் புறணி வளர்ச்சி அதிகமிருக்கும்.
6. கார்பண்டர் நோயியம் என்றால் என்ன?
ஒரு பரம்பரைக் கோளாறு. தற்புரி ஒடுக்கப் பண்பினால் ஏற்படுவது. மிகை விரல் வளர்ச்சி, முகவளர்ச்சி, உடல் பருமன் முதலியவை இருக்கும்.
7. டவுன் நோயியம் என்றால் என்ன?
மங்கோலிய இனப்பண்புகள் இருக்கும். குட்டை விரல்கள், உளக்குலைவு முதலியவை இருக்கும்.
8. எய்சன்மங்கர் நோயியம் என்றால் என்ன?
இதயக் கீழறைத் தடுப்புக்குறை. நுரையீரல் மிகை அழுத்தமும் நீலம் பூத்தலும் இருக்கும்.
9. பேபர் நோயியம் என்றால் என்ன?
ஒரு வகைக் குருதிச்சோகை.
10. பார்பர் நோயியம் என்றால் என்ன?
கொழுப்பு மிகைக் கோளாறு.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில நோயியங்கள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோயியம், என்ன, என்றால், இருக்கும், கோளாறு, முதலியவை