மருத்துவம் :: மக்கள் நல்வாழ்வு
31. அம்மை குத்துதலை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?
1796 இல் ஜென்னர் கண்டறிந்தார்.
32. எச்எல்ஏ என்றால் என்ன?
மனித வெள்ளணு எதிர்ப்பி. (Human Leucocyte Antigen). மனிதரிடம் இதை அடையாளங் கண்டறிவது உறுப்புப் பதியனுக்கும் நோய்ச்சேர்க்கையை அறியவும் பயன்படும்.
33. புரை உண்டாதல் என்றால் என்ன?
சீழ் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் உடலில் தொற்றி நசிவை ஏற்படுத்துதல்.
34. சைக்ளோஸ்போரின் (F 5061) என்றால் என்ன?
தடுப்பாற்றலை ஒடுக்கும் மருத்துவ வேதிப்பொருள். இதன் கண்டுபிடிப்பு பதியன்கள் தள்ளப்படுவதைத் தவிர்க்க உதவும்.
35. ஆர்எச் காரணி என்றால் என்ன?
வழக்கமாக மனிதக் குருதியில் இருக்கும் எதிர்ப்பிகள். மகப்பேற்றின் பொழுது தீய விளைவுகளை உண்டாக்கும். இக்காரணியைக் கொண்டவர்கள் ஆர்எச் நேரிடையாளர்கள். கொள்ளாதவர்கள் எதிரிடையானவர்கள். இந்தியாவில் 97% நேரிடையானவர்களும் 3% எதிரிடையானவர்களும் உள்ளனர்.
36. தொற்றிகள் என்றால் என்ன?
கட்டுப்படுத்தப்பட வேண்டிய அளவுக்கு மனிதனுக்குத் தொல்லை தரும் விலங்குகள். இவை தீங்குயிரிகளே. எ-டு கொசுக்கள்.
37. ஒட்டுண்ணி என்றால் என்ன?
ஒம்புயிரை அண்டி வாழும் நோய் உயிரி. பிளாஸ்மோடியம் மலேரியா நோயை உண்டாக்குவது. இது அனோபிலஸ் கொசு வழியாக நம் உடலை அடைகிறது. மலேரியாவை உண்டாக்குவது. இதில் பிளாஸ்மோடியம் நன்மை பெறுவது, தீமை பெறுவது, நோயினால் துன்பப்படுவது நாம்.
38. ஊசிபோடல் என்றால் என்ன?
ஊசி மூலம் மருந்தை உடலில் செலுத்தல். குருதியில் நேரடியாகக் கலப்பதால் விரைந்த பயனுண்டு. தசையிலும் குருதிக் குழாயிலும் ஊசி போடலாம்.
39. தடுப்பூசி போடல் என்றால் என்ன?
தடுப்பு மருந்தை உடலினுள் செலுத்துதல், காலரா ஊசி.
40. புரைய எதிர்ப்பிகள் யாவை?
அயோடின் கரைசல், டெட்டால், பிக்ரிகக் காடி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மக்கள் நல்வாழ்வு - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்