மருத்துவம் :: மக்கள் நல்வாழ்வு
11. சால்க் ஆவைன் என்றால் என்ன?
இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் மருந்து. ஊசி மூலம் செலுத்தப்படுவது. அமெரிக்க நுண்ணுயிர் இயலார் டாக்டர் ஜே.ஈ. சால்க் (1914-) மற்றும் இவர் தம் குழுவினர் உருவாக்கியது.
12. சாபின் ஆனவன் என்றால் என்ன?
உயிருள்ள ஆனால் வலுக்குறைந்த நச்சியங்களைப் பயன்படுத்தி ஆல்பர்ட் சாபின் என்பார் விழுங்கக் கூடிய மாத்திரைகளை உருவாக்கினார். இவை சாபின் ஆவைன் எனப் பெயர் பெறும்.
13. போலியோ ஒழிப்புத் திட்டம் என்றால் என்ன?
இது அனைத்துலகச் சுழற் சங்கத்தினரால் 1985 இல் தொடங்கப் பட்ட பெருந்திட்டம். இதனால் இலட்சக் கணக்கில் குழந்தைகள் பயனடைந்தனர்.
14. போலியோ என்றால் என்ன?
இளம்பிள்ளை வாதம். கொள்ளை நச்சுயிரியால் உண்டாவது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் கை கால்கள் விளங்கா. இதற்குச் சாபின் ஆவைன், சால்க் ஆவைன் ஆகிய இரண்டையும் முன்கூட்டியே பயன்படுத்தலாம்.
15. தடுப்பாற்றல் உருவாக்கல் என்றால் என்ன?
ஓர் உயிரியை நோய்க்குத் தடை தெரிவிக்குமாறு செய்தல். இது இயற்கைத் தடுப்பாற்றல், ஈட்டுத் தடுப்பாற்றல் என இருவகை.
16. இயற்கைத் தடுப்பாற்றல் என்றால் என்ன?
வெள்ளணுக்கள் மூலம் உடல் இயற்கையாகப் பெற்றிருக்கும் தடுப்பாற்றல். இது நிலைத்திருக்கும்.
17. செயற்கைத் தடுப்பாற்றல் என்றால் என்ன?
தடுப்பு மருந்துகளை உடலில் செலுத்திப் பெறுவது. இது தற்காலிகமாக இருக்கும்.
18. தடுப்புத் தெளிநீர் என்றால் என்ன?
எதிர்ப்புப் பொருள்களும் எதிர்ப்பாற்றலும் கொண்டுள்ள தனியாரிடமிருந்து பெறப்படும் குருதித் தெளிநீர்.
19. குழந்தைகள் ஆவைன் முயல்வுத் திட்டம் என்றால் என்ன?
இது ஒர் உலகத் திட்டம். யூனிசெப், உலக நல நிறுவனம் முதலியவற்றால் துவக்கப்பட்டது. ஒரே தடவையில் பாதுகாப்பாகச் செயல்படுத்தக் கூடிய இசிவு நச்சு மத்தை உருவாக்கியுள்ளது. குழந்தை பிறந்த 6 மாதத் திற்குள் இதைச் செலுத்தலாம்.
20. நச்சு எதிர்ப்பி என்றால் என்ன?
நஞ்சை நடுநிலையாக்கும் பொருள். இது ஒர் எதிர்ப்புப் பொருள். நஞ்சுகளை ஊசிமூலம் செலுத்தி, அவற்றினால் உண்டாக்கும் துலங்கலுக்கேற்ப இந்நஞ்சு உண்டாக்கப்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மக்கள் நல்வாழ்வு - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, தடுப்பாற்றல், ஆவைன், சாபின், சால்க், திட்டம்