கணிதம் :: தர்க்கம் (அளவியல்)

21. தொகுத்தறிதல் என்றால் என்ன?
கணித உய்மானம். கணிதத் தேற்றங்களை மெய்ப்பிக்கும் முறை. குறிப்பாக, வரிசைக் கூட்டுத்தொகைகளுக்குப் பயன்படுவது. 1 + 2 + 3 + 4 + ... n(n+1/2) இன் n ஆவது உறுப்புகளுக்குக் கூட்டுத்தொகை கொண்டது என்பதைக் காட்ட இயலும்.
22. பகுத்தறிதல் என்றால் என்ன?
பகுத்தறிந்து கணிதக் கொள்கைகளை மெய்ப்பிக்கும் முறை. இது தொடர்கணக்குகளுக்குப் பயன்படுவது. எ-டு. தொடர் 1 + 2 + 3 + 4 + ... என்பது n(n+1)/2 என்னும் உறுப்புகளில் n க்குரிய கூட்டுத்தொகை கொண்டது.
23. முரண் (பாரடாக்ஸ்) என்றால் என்ன?
ஒரு கூற்று அறுதியிடப்பட்டு மறுக்கப்படும்பொழுது அது முரணாக அமையும். கணக்கொள்கையில் இரசல் முரண் ஒர் எடுத்துக்காட்டு.
24. முன்மானம் அல்லது முன்மொழிவு என்றால் என்ன?
ஒரு தருக்க வழக்குரையிலுள்ள வாக்கியம் அல்லது வாய்பாடு. இதற்கு உண்மை மதிப்புண்டு. அதாவது, அது மெய் அல்லது பொய்யாக இருக்கலாம்.
25. முன்மொழிவின் வகைகள் யாவை?
1. தனி முன்மொழிவு : ஒன்று மட்டுமே உள்ளது.
2. கூட்டுமுன்மொழிவு: ஒன்றுக்கு மேற்பட்ட முன்மொழிவுகள் கொண்டது.
26. ஆய்வுவழி வருதல் (எம்பிரிகல்) என்றால் என்ன?
நேரடியாகப் பட்டறிவு வழி அமையும் ஆய்வு முடிவுகளிலிருந்தும் உற்றுநோக்கல்களிலிருந்தும் வருவது.
27. ஒப்புமை என்றால் என்ன?
இரு சிக்கல்கள் அல்லது முறைகளுக்கிடையே உள்ள பொது ஒற்றுமை. ஒரு சிக்கலின் தெரிந்த முடிவுகளி லிருந்து மற்றொரு சிக்கலின் முடிவுகளைக் காட்டப் பயன்படுவது.
28. இருபொருள்நிலை என்றால் என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட பொருள், மதிப்பு தீர்வு கொண்ட நிலை,
29. வழிமுறையாக்கல் என்றால் என்ன?
ஒரு சிக்கலை அடுத்தடுத்த தோராயங்கள் மூலம் செய்தல், ஒவ்வொரு தோராயமும் அதற்கு முந்திய தோராயத்தைத் தொடக்கப்புள்ளியாகப் பெற்று மிகத் துல்லிய மதிப்பீட்டைப் பெறும். எ-டு. 3 இன் இருபடி மூலங்காணல்.
30. கருத்து என்றால் என்ன?
முறையாக எண்ணுதல். இது பருப்பொருள் கருத்தாகவும் நுண்பொருள் கருத்தாகவும் இருக்கும். பொதுமையாக்கலின் உயரிய நிலை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்க்கம் (அளவியல்) - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அல்லது, பயன்படுவது, கொண்டது