கணிதம் :: தர்க்கம் (அளவியல்)
11. முரண் என்றால் என்ன?
ஒன்றை மறுக்கும்பொழுது அல்லது உறுதியாகக் கூறும் பொழுது முரண்நிலையை உண்டாக்குங்கூற்று. எ-டு. கணக் கொள்கையின் இரசல் முரண்.
12. இசைவுத்திறன் (consistency) என்றால் என்ன?
கொள்கை, தொகுதி, முன்மொழிவு முதலியவற்றைப் பற்றியது.முரணுக்கு இடமளிக்காதது. ஏனெனில், அதன் வெளிப்படை உண்மைகள், தேற்றங்கள் ஆகியவற்றில் ஒன்றுகூட விதியினால் வருவிக்கப்பட்டவையல்ல. முரண்பாடு உள்ளவையுமல்ல.
13. உய்மானச் செயல் என்றால் என்ன?
இதில் ஒரு மாறியின் சமவாய்ப்பு மதிப்புகளின் தொடர் உண்டாக்கப்படும். இவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட புள்ளி இயல்பரவல் தோன்றும். எ-டு. பாய்சன் பரவலை அமைத்தல்.
14. கூற்று என்றால் என்ன?
நிறுவுதலின் இரு பகுதிகளில் ஒன்று. மற்றொன்று காரணம். கூற்று: நாண் BD = நாண் AC காரணம்: தோற்றம்.
15. வெளிப்படை உண்மை என்றால் என்ன?
எடுகோள். நிறுவல் இல்லாமல் உண்மை என ஒப்புக் கொள்ளப்படுவது. இதிலிருந்து மேலும் கூற்றுகள் அல்லது தேற்றங்கள் வருவிக்கப்படலாம்.
16. மெய்ம்மதிப்பு என்றால் என்ன?
தருக்கத்திலுள்ள ஒரு முன்மொழிவின் மெய் அல்லது பொய். T - மெய்க்கூற்று, F - பொய்க்கூற்று. கணிப்பொறி முறைமையில் 1, 0 ஆகிய இரு எண்களும் உண்மையைக் குறிப்பவை.
17. மெய்யட்டவணை என்றால் என்ன? பயன் யாது?
தருக்கத்தில் இது ஒர் எந்திர நடவடிக்கை. அணி என்று கூறப்படுவது. சில தருக்கச் செயல்களை வரையறுக்கவும் கலவை முன்மொழிவுகள் அல்லது கூற்றுகளின் மெய் மதிப்பைக் காணவும் பயன்படுவது.
18. மெய்ந்நேரம் என்றால் என்ன?
ஒர் இயல் நிகழ்ச்சி நடைபெறுவதற்குரிய உண்மை நேரம்.
19. கருதுகோள் என்றால் என்ன?
ஒன்றைக் கற்பனையாகக் கொள்வது. அதாவது, ஒரு கூற்று அல்லது வாய்பாடு மெய்ப்பிக்கப்பட வேண்டிய பொழுது கொள்ளப்படுவது. வழக்குரை நோக்கத்திற்காக உண்மை என உய்மானமாகக் கொள்ளப்படுவது.
20. கருதுகோள் ஆய்வு என்றால் என்ன?
பரவலிலிருந்து மாதிரியைப் பயன்படுத்திச் சமவாய்ப் புள்ள மாறிப் பரவலின் உய்மானம் அல்லது கருது கோள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா விலக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யும் வழி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்க்கம் (அளவியல்) - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், அல்லது, உண்மை, கொள்ளப்படுவது, கூற்று