கணிதம் :: வாய்பாடுகளும் விதிகளும்
31. டாக்டர் கிளாட் சிமன் என்பார் யார்?
கணிதப் பொறியாளர் (1917-2001). எல்லாத் தகவல்களையும் ஒன்றுகளாகவும் சுழிகளாகவும் சுருக்கலாம் என்று கூறியவர்.
32. விளையாட்டுக் கொள்கையை உருவாக்கியவர்கள் யார்? எப்பொழுது?
1940 களில் ஆஸ்திரியக் கணக்கறிஞர்கள் வான் நியூமன், ஆஸ்கர் மார்ஜென்ஸ்டன் ஆகிய இருவரும் உருவாக்கினர்.
33. விளையாட்டுக் கொள்கை பயன்படும் துறைகள் யாவை?
பொருளியல், அரசியல், மெய்யறிவியல்.
34. இக்கொள்கைக்கு நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்கள் யாவர்?
சி. ஹார்சைன், ஜான் நாஷ் (அமெரிக்கா), ரெயன்கார்டு செல்டன் (ஜெர்மனி) ஆகிய மூவரும் 1994 இல் நோபல் பரிசு பெற்றனர் இவர்கள் கணக்கையும் பொருளியலையும் ஒன்றாக இணைத்தனர்.
35. விளையாட்டுக் கொள்கை எந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியது?
சதுரங்க ஆட்டத்திலிருந்து தொடங்கியது.
36. இக்கொள்கையின் அடிப்படை யாது?
சதுரங்க ஆட்டத்தில் ஒரு சமயம் ஒருவர் தோற்பது. மற்றொரு சமயம் வெற்றி பெறுவதும் வாடிக்கை. இதை வைத்துக் கொண்டே அவர்கள் நிலையான விதிகளை உருவாக்கினார்கள். இவை அடங்கியதே விளையாட்டுக் கொள்கை.
37. ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற சமன்பாடு யாது?
E = mc2.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாய்பாடுகளும் விதிகளும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - விளையாட்டுக், கொள்கை