கணிதம் :: வாய்பாடுகளும் விதிகளும்
1. வாய்பாடு என்றால் என்ன?
ஒரு பொதுக்கோவை. வேறுபட்ட அளவுகளின் பல மதிப்புகளுக்குப் பொருந்துவது. எ-டு. வட்டப் பரப்பிற்குரிய வாய்பாடு. πr2.
2. ஈரோ வாய்பாடு யாது?
a,b,c என்னும் பக்கங்களைக் கொண்ட முக்கோணப் பரப்பலைக் காணும் வாய்பாடு.
A = √[s (s-a)(s-b)(s-c)]. s - அரைச்சுற்றளவு.
3. நேப்பியர் வாய்பாடுகளின் பயன்களைக் கூறுக.
கோளமுக்கோணவியலில் பயன்படும் சமன்பாட்டுத் தொகுதி. கோள முக்கோணத்தில் பக்கங்களையும் கோணங்களையும் கணக்கிடப் பயன்படுபவை.
4. கோண வாய்பாடுகள் யாவை?
1) sin ½ (a-b) / sin ½ (a+b) = tan ½ (α-β)/ tan ½ y
2) cos ½ (a-b) / cos ½ (a+b) = tan ½ (α-β) tan ½ y
3) sin ½ (α—β) / sin ½ (α—β) = tan ½ (a-b) cot ½ c
4) cos ½ (α-β) / cos ½ (α-β) = tan ½(a+b) / cos ½ C
5. பகுதி வாய்பாடு என்றால் என்ன?
புள்ளி P = mx2 + nx1 my2 + ny1m+m m+m
6. ஆய்லர் வாய்பாடு_யாது?
இது பன்முகி தொடர்பானது.
1. ஒரு பன்முகியில் விளிம்புகள் e, முகங்கள் f, உச்சிகள் v ஆகியவற்றின் எண்ணிக்கையைத் தொடர்புபடுத்துவது.
அது பின்வருமாறு:
v + f- e =2.
எ-டு. கனசதுரத்திற்கு 8 உச்சிகளும் 6 முகங்களும் 12 விளிம்புகளும் உண்டு.
8+6-12=2 தோற்றத்தைப் பயன்படுத்த 5 ஒழுங்கான பன்முகிகள் மட்டும் இருப்பதைக் காட்ட இயலும்.
2. 1 இன் வர்க்கமூலம் i ஆக இருக்கும்பொழுது, சார்பு eiθ வின் வரையறையாவது,
eiθ = cosθ + sinθ
2=x+ iyஎன்னும் எச்சிக்கல் எண்ணும் இவ்வடிவத்தில் எழுதப்படலாம். ஆர்கண்ட படத்தில் r, θ என்பவை 2ஐக் குறிக்கும்பொழுது, x = rcosθ, y = rsinθ என்பவை மெய்யானவை.
θ = π என்று கொள்ள, ex = -1 என்பதையும் θ = 2π என்பது e2π=1 என்பதையும் அது கொடுக்கும்.
7. தொலைவாய்பாடு என்றால் என்ன?
கார்ட்டீசியன் ஆயங்களின் (x2, y2), (x, y) ஆகிய இரு புள்ளிகளுக்கிடையே உள்ள தொலைவிற்குரிய வாய்பாடு. அது பின்வருமாறு.
√[1(x1-x2)2+(y1-y2)2]
8. ஒடுக்கல் வாய்பாடுகள் யாவை?
0 - 90° க்கு இடையே உள்ள கோணத் தொடர்பாக (π/2) ஒரு கோணத்தின் தொடுகோடு சைன், கோசைன், சார்புகளைக் கோவைப்படுத்தும் முக்கோணவியல் வாய்பாடுகள்.
எ-டு.
sin (90° + α) = cos α.
sin (180° + α) = -sin α
sin (270° + α) = -cos α
cos (90° + α) = -sin α.
tan (90° + α) = cot α.
9. மீள்வாய்பாடு என்றால் என்ன?
தொடரினம் an+1=an+an-1 என்னும் விதியினால் வருவிக் கப்படுவது.
10. ஈவு விதி யாது?
loga MN = logaM -loga N
(a > 0 ≠1) M > 0 N > 0
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாய்பாடுகளும் விதிகளும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வாய்பாடு, tan , cos , sin , என்ன, என்றால், யாது, வாய்பாடுகள்