கணிதம் :: பரவலும் ஆயங்களும்
41. மாற்றுவரைபடம் என்றால் என்ன?
மாறும் இரு பண்புகளுக்கிடையே உள்ள தொடர்பைக் காட்டும் வரைபடம்.
42. வட்டப்படம் என்றால் என்ன?
விளக்கப்படங்களில் ஒன்று. இது பை எனப்படும் பணியாரம் போலவும் அதன் வட்டம் பகுதிகள் அப் பணியாரத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுக்ள் போலவும் காணப்படுவதால், வட்டப்படம் எனப் பெயர் பெறுகிறது. இது இன்றியமையாதது, பெயர் பெற்றது. செய்தித்தாள்களிலும் விளம்பரங்களிலும் இப்படம் மக்கள் கவனத்தைக் கவரும் வகையில் வரையப்பட்டி ருக்கும்.
43. இதன் வகைகள் யாவை?
1. எளிய வட்டப்படம், வெவ்வேறு நாடுகளின் பெட்ரோலிய உற்பத்தியை விளக்குவது.
2. உட்பிரிவு வட்டப்படம் இதில் ஒருதரவிலுள்ள மொத்த மதிப்பு, ஒரு பெரிய வட்டத்தினால் குறிக்கப்படும்.
44. படவரையம் என்றால் என்ன?
படவரைவு. பட வடிவத்தில் புள்ளி விவரத் தகவல்களைக் குறிக்கும் படம். எ-டு. கலப்பு விதைகளில் இருந்து உண்டாகும் வெள்ளை, மஞ்சள், சிவப்பு மற்றும் இளஞ் சிவப்புப் பூக்களின் எண்ணிக்கையை உரிய வண்ணப் பூவடிவத்தோராய எண்ணிக்கையால் காட்டலாம்.
45. மாறிலிப் படம் (nomogram) என்றால் என்ன?
மூன்று இணை கோடுகளைக் கொண்ட வரைபடம். மூன்று தொடர்புள்ள மாறிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோடு அளவுகோல். எ-டு. கோடுகள் ஒரு நிறையுள்ள வளியின் வெப்பநிலை, கன அளவு, அழுத்தம் ஆகிய வற்றைக் காட்டுபவை. கன அளவும் அழுத்தமும் தெரிந்தால், வெப்பநிலையை இப்படத்திலிருந்து அறியலாம்.
46. சிதறுபடம் என்றால் என்ன?
கால்டன் வரைபடம். (x,y) என்னும் இரு மாறிப் பரவலின் தகவலைக் குறிக்கும் வரைபடம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரவலும் ஆயங்களும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, வட்டப்படம், வரைபடம்