கணிதம் :: பரவலும் ஆயங்களும்
(1) பரவல்
1. பரவல் என்றால் என்ன?
ஒரு மதிப்பின் மூலம் உற்றுநோக்கல்களை இடைவெளிகளாகப் பிரித்தல். கணித வாய்பாட்டிற்குரிய பொதுச் சொல். வரம்பற்ற மாறிகளின் மதிப்புகள் தொடர்பாக நிகழ்தகவுகளை இவ்வாய்பாடுகள் அளிப்பவை.
2. பரவலின் வகைகள் யாவை?
1. தனித்த பரவல். 2. தொடர் பரவல். 3. ஈருறுப்புப் பரவல்.
3. இயல்நிலைப் பரவல் என்றால் என்ன?
பரவலின் ஒரு வகை. ஒரு புள்ளி இயல் பரவல் N(μ,δ2) என்று எழுதப்படுவது.
4. இப்பரவலின் பண்புகள் யாவை?
1. இதன் வளைவரையானது கூட்டுச் சராசரி மதிப்பின் இரு பக்கத்திலும் சமச்சீராக இருக்கும்.
2. இதற்கு ஒரே ஒரு முகடு மட்டும் உண்டு.
3. கூட்டுச் சராசரி = இடைநிலை = முகடு = μ
4. அடிக்கோடு இதன் அணுகுத் தொடுகோடாகும்.
5. கைவர்க்கப்பரவல் என்றால் என்ன?
x2 பரவல். திட்ட இயல் பரவலுள்ள சமவாய்ப்பு மாறிகளின் கூட்டுத் தொகைப் பரவல்.
6. கைவர்க்க ஆய்வு என்றால் என்ன?
எந்த அளவுக்கு அறிமுறை நிகழ்தகவுப் பரவல், ஒரு தகவல் கணத்தில் பொருந்துகிறது என்பதற்குரிய அளவு.
7. பெருக்குப் பரவல் என்றால் என்ன?
பயனுள்ள விளைவு கிடைக்குமுன், தனித்த பர்னவுலி முயற்சிகளின் பரவல். எ-டு. தலை வருவதற்கு முன் ஒரு நாணயத்தைப் பல தடவைகள் உருட்டுதல்.
8. பெருக்குச் சார்பு என்றால் என்ன?
வெற்றியுள்ள முடிவு கிடைக்குமுன், தனித்த பர்னவுலி முயற்சிகள் பல பரவி இருத்தல். எ-டு. தலை விழுவதற்கு முன் ஒரு நாணயத்தைப் பல தடவைகள் சுண்டுதல்.
9. வீச்சு (ரேஞ்) என்றால் என்ன?
ஒரு பரவலின் மீப்பெருமதிப்பிற்கும் மீச்சிறு மதிப்பிற்கும் உள்ள வேறுபாடு. எ-டு. ஐந்து மாணவர் எடைகள் (கி.கி) 45, 47, 43, 50, 54. வீச்சு = 54 - 43 = 11 கி.கி.
10. இதன் பயன்கள் யாவை?
1. பொருள்களின் தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளில் பயன் படுவது.
2. பங்குகளில் விலை நிலவரங்கள், வட்டி வீதங்கள், பருவ நிலை முன்னறிவிப்புகள், வெப்பநிலை வேறுபாடு முதலியவற்றை அறிய உதவுதல்.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரவலும் ஆயங்களும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பரவல், என்ன, என்றால், இதன், தனித்த, பரவலின், யாவை