புவியியல் :: காலம்
21. குறுக்குக்கோடு என்றால் என்ன?
அட்சக் கோடு. இது கிழக்கு மேற்காகச் செல்வது. உருண்டை வடிவாகப் புவி உள்ளதால், இதுவும் வட்ட வடிவமாகவே இருக்கும்.
22. இதன் இயல்புகள் யாவை?
1. இக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாகவே வரையப்படும்.
2. இவற்றின் எண்களால் இவற்றை எளிதில் இனங்கண்டு கொள்ளலாம். இந்த எண்கள் இவற்றின் கோள அளவைக் குறிக்கும்.
3. இவற்றில் பெரியது நிலநடுக்கோடு.
4. சுற்றளவில் குறைபவை.
23. இக்கோட்டின் பயன் யாது?
ஓரிடத்தைத் துல்லியமாகக் கணக்கிடலாம்.
24. அனைத்துலக நாட்கோடு என்றால் என்ன?
புவி மேற்பரப்பிலுள்ள கற்பனைக்கோடு. வடதென் முனைகளை இணைப்பது. ஒரு நாளின் தொடக்கத்தையும் முடிவையும் குறிப்பது.
25. இது எப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டது?
1884இல் நடைபெற்ற அனைத்துலகத் தீர்க்கக் கோட்டு மாநாடு 180° தீர்க்கக் கோட்டைத் தேர்ந்தெடுத்தது.
26. உயரக்கோடு என்றால் என்ன?
ஒரு படத்தில் வரையப்படும் கோடு. ஒரு மட்டத்திற்குக் கீழோ மேலோ சம உயரமுள்ள புள்ளிகளைச் சேர்க்கும் கோடு, நில மேற்பரப்பின் தோற்றத்தைக் காட்டுவது.
27. மையவரை (மெரிடியன்) என்றால் என்ன?
புவிமுனைகள் வழியே அமையும் கற்பனைப் பெரு வட்டம்.
28. முதல் மைய வரை என்றால் என்ன?
கிரீன்விச்சு வழியாகக் கிழக்கு அல்லது மேற்காக அளக்கப் பெறும் நடுவரைக் கோடு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலம் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கோடு