புவியியல் :: காலம்
![Time](images/time.jpg)
1. உலகில் எத்தனை மண்டலங்கள் உள்ளன?
24 மண்டலங்கள் உள்ளன.
2. நேரம் என்றால் என்ன?
ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு நேரம் உண்டு. ஆகவே ஒரு மண்டலத்திற்கு மற்றொரு மண்டலத்திற்குச் செல்லும் பொழுது நம் கடிகாரத்தைத் திருத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
3. இரவு பகல் ஏற்படுவதேன்?
கதிரவனைச் சுற்றிப் புவி வலம் வருகிறது. தன் அச்சைச் சுற்றியும் சுழல்கிறது. நாம் இருக்கும் புவியின் பகுதி கதிரவனை நோக்கும்பொழுது பகல்; அதைவிட்டு விலகும் பொழுது இரவு.
4. சம இராப்பகல் நாட்கள் என்றால் என்ன?
ஒரு சாய்வச்சில் புவி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கதிரவனையும் சுற்றி வரும்பொழுது, கதிரவன் கடகக் கோட்டுக்கும் மகரக் கோட்டுக்கும் இடையே ஆண்டுக் கொரு முறை வருகிறது. இக்காலத்தில் இது நிலநடுக் கோட்டை இருமுறை கடக்குகிறது. மார்ச் 20-21 மற்றும் செப்டம்பர் 22- 23 ஆகிய நாட்களில் கதிரவன் நிலநடுக் கோட்டிற்கு மேல் செங்குத்தாகக் காணப்படும். இந் நாட்களில் புவியின் இரவு மற்றும் பகற்பொழுது சமமாக இருக்கும். இந்நாட்களைச் சம இராப்பகல் நாட்கள் என்பர்.
5. கதிரவன் நிற்றல் என்றால் என்ன?
சம இராப்பகல் நாட்களுக்கிடையே அமைந்த கதிரவன் வட்ட நடுவழியிலுள்ள இரு புள்ளிகளில் ஒன்று.
6. இதன் வகைகள் யாவை?
1. விண் நடுக்கோட்டில் வடக்கே கதிரவன் அதிகத் தொலையில் இருப்பதற்குக் கோடைக் கதிரவன் நிற்றல்.
2. தெற்கே இருப்பதற்கு மாரிக் கதிரவன் நிற்றல் என்றும் பெயர்.
7. ஆண்டின் வகைகள் யாவை?
1. திங்களாண்டு - 12 மாதங்களுக்குரியது
2. கதிரவன் ஆண்டு 365.24219 சராசரி கதிரவன் நாட்கள்.
3. விண்மீன் ஆண்டு 365.25636 சராசரி கதிரவன் நாட்கள்.
8. மூவகை நேரங்கள் யாவை?
1. உள்ளுர் நேரம்
2. திட்ட நேரம்
3. கிரீன்விச்சு நேரம்
9. உள்ளுர் நேரம் என்றால் என்ன?
மைய வரையைக் கதிரவன் கடக்கும் பொழுது அளக்கப்படும் ஒரிடத்தின் நேரம். இது இடத்திற்கிடம் மாறுபடும். இந்திய உள்ளிட நேரமும் இங்கிலாந்து உள்ளிட நேரமும் ஒன்றாக இரா.
10. திட்ட நேரம் என்றால் என்ன?
ஒவ்வொரு நாடும் தன் நடுவே செல்லும் நெடுக்குக் கோட்டிலுள்ள ஓரிடத்தில் உள்ளுர் நேரத்தைத் கணக்கிட்டு, அதையே நாடு முழுவதும் பின்பற்றும். இதற்குத் திட்டநேரம் என்று பெயர். இந்தியாவைப் பொறுத்த வரை 82.5° நெடுக்குக் கோடு திட்ட நெடுக்குக் கோடு ஆகும். அங்குக் கணக்கிடப்படும் நேரமே திட்டநேரமாகும். இந்நேரம் நாட்டுக்கு நாடு வேறுபடும்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலம் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கதிரவன், நேரம், என்றால், என்ன, நாட்கள், உள்ளுர், திட்ட, நெடுக்குக், யாவை, நிற்றல், இரவு, பொழுது, இராப்பகல்