புவியியல் :: காலம்
11. கிரீன்விச்சு நேரம் என்றால் என்ன?
முதன்மை நெடுக்கோட்டில் கணக்கிடப்படும் திட்ட நேரம்.
12. இதன் சிறப்பு யாது?
இதை அடிப்டையாகக் கொண்டு ஏனைய இடங்களில் நேர அளவு, அவ்வவ்விடங்களின் நெடுக்குக் கோட்டைக் கொண்டு கணக்கிடப்படும். காட்டாகக், கிரீன்விச்சு திட்ட நேரம் பகல் 12 மணி என்றால், 60° கிழக்கு நெடுக்குக் கோட்டில் மாலை 4 மணி இருக்கும். அவ்வாறெனில், 60 x நெடுக்கோட்டு வேறுபாடு. 4 x 60 = 240 நிமி. அல்லது 4 மணி. இடம் கிழக்குப் பாதிக் கோணத்தில் இருப்பதால், கிரீன்விச்சு நேரத்திற்கு முன்னோக்கி 4 மணியாக இருக்கும். இதே இடம் மேற்குப் பாதிக்கோணத்தில் இதே 60° நெடுக்குக்கோட்டில் இருந்தால், கிரீன்விச்சு நேரத்திற்கு 4 மணி பின் நோக்கி இருக்கும். காலை 8 மணியாக இருக்கும். கிழக்கே சென்றால் நேரம் குறையும் மேற்கே சென்றால் கூடும்.
13. நெடுக்குக்கோடு என்றால் என்ன?
தீர்க்கக்கோடு. இக்கோடுகள் வட தென்முனைகளை இணைத்து வட்டமாகச் செல்பவை.
14. நெடுக்குக்கோடுகள் சுற்றளவில் குறைவதில்லை. ஏன்?
இவை எல்லாம் இரு முனைகள் வழியாகச் செல்வதே இதற்குக் காரணம்.
15. புவிமேல் மொத்தம் எத்தனை நெடுக்குக்கோடுகள் வரையலாம்?
360 நெடுக்குக் கோடுகள்.
16. நெடுக்குக்கோட்டின் பயன்கள் யாவை?
1. ஒரிடத்தைத் துல்லியமாகக் கணக்கிடலாம்.
2. புவியில் வெவ்வேறு இடங்களில் நேரத்தைக் கணக்கிட உதவும்.
17. ஒவ்வொரு நெடுக்குக் கோட்டிற்கும் நேரம் வேறுபடுகிறது. ஏன்?
ஒவ்வொரு நெடுக்குக் கோட்டுக்கும் 4 நிமிட வேறுபாடு உள்ளதே இதற்குக் காரணம்.
18. இதனால் கிழக்கே சென்றாலும் மேற்கே சென்றாலும் நேரம் எவ்வாறு அமையும்?
கிழக்கே சென்றால் நேரங் குறையும். மேற்கே சென்றால் கூடும்.
19. கிரீன்விச்சு நெடுக்குக்கோடு என்று எதற்குப் பெயர்?
நெடுக்குக் கோடுகளில் இலண்டன், அருகிலுள்ள கிரீன்விச்சு ஆராய்ச்சிக் கூடத்தின் வழியாகச் செல்வது. முதன்மை நெடுக்குக்கோடு அல்லது கிரீன்விச்சு நெடுக்குக் கோடு ஆகும்.
20. கிரீன்விச்சு நெடுக்குக் கோடு எவ்வாறு குறிக்கப்படுகிறது?
இது புவியின் ஒரு புறம் 0° என்றும் அதன் மறுபுறம் 100° என்றும் குறிப்பிடப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலம் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கிரீன்விச்சு, நெடுக்குக், நேரம், சென்றால், இருக்கும், நெடுக்குக்கோடு, மேற்கே, என்றால், கிழக்கே