புவியியல் :: ஆறுகளும் பனியாறுகளும்
1. ஆறு என்றால் என்ன?
ஒடும் நீரே ஆறு.
2. ஆற்றுக்கு நீர் வழங்குபவை யாவை?
மழை முதன்மை மூலம். ஏரிகள், ஊற்றுகள், உருகும் பனிக்கட்டி ஆகியவை துணை மூலங்கள்.
3. ஆறுகளின் போக்கு எவ்வாறு அமைந்துள்ளது?
மலையில் தோன்றிச்சமவெளி வழியாக ஒடி இறுதியாகக் கடலில் கலப்பவை.
4. உலகின் மிக நீளமான ஆறு எது?
நைல் நதி. இதன் நீளம் 6,695 கி.மீ. இது கிழக்கு ஆப்பிரிக்கா வழியாகச் சென்று இறுதியாக மையத் தரைக் கடலில் கலக்கிறது.
5. இமாலயத் தொகுதியின் முக்கிய ஆறுகள் யாவை?
1. இந்து நதி
2. கங்கையாறு
3. பிரம்மபுத்திரா
6. இந்நதிகள் வற்றாதவை. ஏன்?
1. உருகும் பனிக்கட்டி நீரை அளிப்பதால் வற்றாதவை.
2. தங்கள் ஒட்டத்தில் 70% அளவைக் கடலுக்குச் செலுத்துகின்றன.
7. இந்துநதியின் சிறப்புகள் யாவை?
1. நாகரிகத்தின் தொட்டில்.
2. இரு பக்கங்களிலும் பள்ளத்தாக்குகள் உண்டு.
3. இதற்கு ஐந்து பெரிய கிளையாறுகள் உண்டு. ஜீலம், செனாப், இரவி, பீஸ், சட்லஜ்.
8. இந்து நதி எங்கு உண்டாகிறது?
திபேத்திலுள்ள கைலாய மலையில் உண்டாகிறது. பாகிஸ்தான் வழியாகச் சென்று அரபிக்கடலில் கலக்கிறது.
9. கங்கையாறு எங்கு உண்டாகிறது?
இமய மலையில் கங்கோத்திரியில் உண்டாகிறது. உத்திரப்பிரதேஸ், பீகார், வங்காளம் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
10. கங்கையின் கிளையாறுகள் யாவை?
ஜமுனா, கோமதி, கார்கா, சாரதா, கண்டக், சாம்பல், சான், கோசி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறுகளும் பனியாறுகளும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, உண்டாகிறது, கலக்கிறது, வழியாகச், மலையில், சென்று