புவியியல் :: ஆறுகளும் பனியாறுகளும்
11. ஆறுகள் வளைந்து வளைந்து செல்வதேன்?
குன்று, பாறை, மலை முதலிய தடைகள் இருப்பதால் இவ்வாறு செல்கின்றன. சமவெளியில் பெரும்பாலும் நேராகச் செல்லும்.
12. நிலத்திற்குக்கீழ் ஆறுகள் உள்ளனவா?
உள்ளன. சுண்ணாம்புக்கல் உள்ள இடத்தில் உள்ளன. மழைநீர் இக்கல்லை அரித்துத் துளைகளையும் குகைகளையும் உண்டாக்குவது. ஒர் ஆறு மேற்பரப்பில் பாறைத் துளையில் சென்று, குன்று வழியாக நிலத்திற்குக் கீழ் ஒடவல்லது.
13. பிரம்மபுத்ரா எங்கு உண்டாகிறது?
கிழக்குத் திபேத்தில் உண்டாகிறது. இது கங்கையாற் றுடன் சேர்ந்து தன் நீரை வங்காள விரிகுடாவில் கலக்குமாறு செய்கிறது. இமயமலை வழியாக 1300 கி.மீ ஒடுவது.
14. தக்கான ஆறுகள் யாவை?
1. கோதாவரி
2. கிருஷ்ணா
3. காவிரி
4. பெண்ணாறு
5. மகாநதி
6. தாமோதர்
7. ஷராவதி
8. நெட்ராவதி
9. பாம்பா
10. நர்மதா
11. தப்தி
12. பாரத புழா
15. இவை வற்றும் நதிகள் ஏன்?
மழை பெய்தால்தான் இவற்றிற்கு நீர் கிடைக்கும். மழை இல்லை என்றால் வற்றிய நதிகளே.
16. உலகின் நீளமான இரு நதிகள் யாவை?
நைல்நதி, அமேசான் நதி. தென் அட்லாண்டிக் பெருங் கடலில் கலக்கிறது.
17. உலகின் சிறந்த நதி எது? ஏன்?
அமேசான். இது அதிக நீரைக் கொண்டு செல்கிறது. வினாடிக்கு 1900 கன மீட்டர் நீரைக் கொண்டு செல்கிறது. வெள்ளத்தின் பொழுது இந்நீர் இன்னும் அதிகமாகும். உலகிலேயே இதற்குப் பெரிய ஆற்று வடிநிலம் உள்ளது. இதன் பரப்பு 7 மில்லியன் சதுர கிலோமீட்டர். இதற்கு 15,000 கிளையாறுகள் உள்ளன. இக்கிளையாறுகளில் நீண்டது மெடைரா. இதன் நீளம் 3200 கி.மீ.
18. தமிழ் நாட்டின் சிறந்த ஆறு எது? அது எங்குத் தோன்றுகிறது?
காவிரி. குடகுமலையில் தோன்றுகிறது.
19. ஆற்றின் மூன்று நிலைகள் யாவை?
1. இடைநிலை
2. முதிர்நிலை
3. முப்பு நிலை
20. ஆற்றின் பயன்கள் யாவை?
1. பள்ளத் தாக்குகளையும் நீர்வீழ்ச்சிகளையும் உண்டாக்குகின்றன.
2. நீர் மின்சாரம் கிடைக்கிறது - மேட்டுர்
3. பாசனத்திற்கு வேண்டிய நீரை அளிக்கிறது.
4. நாகரிகத்தின் பிறப்பிடம். நாகரிகங்கள் ஆற்றங்கரை ஒரங்களிலேயே தோன்றின.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறுகளும் பனியாறுகளும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, ஆறுகள்