புவியியல் :: புவி இயற்பியல்
1. புவி இயற்பியல் என்றால் என்ன?
புவி அமைப்பியலின் ஒரு பிரிவே புவி இயற்பியல். இது ஒரு பயன்படு அறிவியல். இயற்பியலின் நெறிமுறைகளையும் நுணுக்கங்களையும் கொண்டு புவியையும் அதன் சூழ்நிலையையும் ஆராயப் பயன்படுவது.
2. இதன் நோக்கு என்ன?
திண்மநிலையிலுள்ள புவி, கடல்கள், காற்றுவெளி, காந்தப் புலங்கள், துகள்கள், கோளங்கள், கதிரவனுக்கும் கோள்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஆகியவற்றை விளக்குவது.
3. புவி இயற்பியல் கனிவளத்தேட்டம் என்றால் என்ன?
புவி இயற்பியல் முறைகளைக் கொண்டு கனிவளங் காணல்.
4. புவி வடிவ இயல் என்றால் என்ன?
புவி உருவியல். புவிமேற் பரப்பைப் படமாக்குதல், அளவை செய்தல் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. இதனால் அதன் வடிவம், அளவு, ஈர்ப்புப்புலம் ஆகியவற்றை உறுதி செய்ய இயலும்.
5. புவித் தொழில் நுட்ப இயல் என்றால் என்ன?
கட்டுமானப்பணிகளுக்காக மண் பண்புகளை ஆராயுந் துறை.
6. கதிரவன் குடும்பம் என்றால் என்ன?
கோள்களையும் அவற்றின் திங்கள்களையும் கொண்ட தொகுதி.
7. கோள்கள் ஒன்பது யாவை?
புதன், வியாழன், வெள்ளி, புவி, செவ்வாய், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ.
8. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரு கோள்கள் யாவை?
ஸ்மைலி, கர்லா.
9. புவி மைய விண்ணகம் என்றால் என்ன?
புவியை மையமாகக் கொண்ட உலகம் என்னும் தாலமி கருத்து.
10. கதிரவன் மைய விண்ணகம் என்றால் என்ன?
கதிரவனை மையமாகக் கொண்ட விண்ணகம். இதுவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. தாலமி கருத்துக்கு மாற்றான கோப்பர்னிகஸ் கருத்து.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி இயற்பியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - புவி, என்ன, என்றால், இயற்பியல், கருத்து, கொண்ட, விண்ணகம்