புவியியல் :: புவி இயற்பியல்
11. கதிரவன் குடும்பம் எவ்வாறு தோன்றியது?
கதிரவனும் அதன் கோள்களும் வானவெளியில் சுற்றிக் கொண்டிருந்த வளி முகில், தூசி ஆகிய இரண்டிலிருந்தும் தோன்றின. முகில் ஈர்ப்பினால் ஒன்றாக இழுக்கப்படவே அது தடித்தது. முகிலின் பெரும் பகுதி கதிரவன் ஆயிற்று. எஞ்சியது கோள்கள், திங்கள்கள், சிறுகோள்கள் ஆயின.
12. விண்ணகத் தோற்றக் கொள்கைகள் யாவை?
1. பெரு வெடிப்புக் கொள்கை.
2. நிலைப்பு நிலைக் கொள்கை.
13. பெருவெடிப்புக் கொள்கையை உருவாக்கியவர் யார்?
இக் கொள்கையை முதன் முதலில் 1927இல் லெமாய்டர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
14. இக்கொள்கையைத் திருத்தி அமைத்தவர் யார்?
1946இல் ஜார்ஜ் கேமோ திருத்தியமைத்தார்.
15. இக்கொள்கை கூறுவது யாது?
விண்ணகத் தோற்றக் கொள்கைகளுள் ஒன்று. விண்ணகத்திலுள்ள எல்லாப் பொருள்களும் மீஅடர்த்தியுள்ள திரட்சி வெடித்ததலிருந்து தோன்றின. இதில் புவி முதலிய கோள்களும் அடங்கும்.
16. நிலைப்பு நிலைக் கொள்கை கூறுவது யாது?
விண்ணகம் எப்பொழுதும் நிலைப்பு நிலையில் உள்ளது. தொடக்கமோ முடிவோ இல்லை.
17. விண்கோளம் என்றால் என்ன?
முடிவிலா ஆரமுள்ள கற்பனைக் கோளம். இதில் விண் பொருள்கள் அடங்கியுள்ளன.
18. விண்நடுக்கோடு என்றால் என்ன?
விண்கோளப் பெருவட்டம். விண்கோளத்தை இது வட தென் கோளங்களாகப் பிரிப்பது.
19. விண்விசை இயல் என்றால் என்ன?
விண் பொருள்களுக்கிடையே உள்ள விசைகள், இயக்கங்கள் ஆகியவற்றை ஆராயுந் துறை. நியூட்டன் இயக்க விதி, ஈர்ப்பு விதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. ஏவிய பின் செயற்கை விண்பொருள்களையும் ஆராய்வது.
20. பால் வழி என்பது என்ன?
இப்பால் வழியின் ஒரு சிறு பகுதியே கதிரவன் மண்டலம். பால் வழி என்பது விண்ணகத்திலுள்ள 10 பில்லியன் விண்மீன் கூட்டங்களில் ஒன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி இயற்பியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், நிலைப்பு, கொள்கை, கதிரவன்