புவியியல் :: புவி இயற்பியல்
21. விண்மீன்களுக்குக் கோள்கள் உண்டா?
உண்டு என்று தெரிகிறது.
22. புவி வேதிஇயல் என்றால் என்ன?
புவியின் இயைபையும் அதன் தொடர்பான செயல்களை யும் ஆராய்வது.
23. புவி இயற்பியல் நிகழ்ச்சிகள் யாவை?
1. புவிக் காந்தம்.
2. கதிரவன் செயல்.
3. வளர் ஒளிகள்.
24. புவிக்காந்தம் என்றால் என்ன?
இது புவியின் முதன்மைக் காந்தப் புலமாகும். இரு முனைகள் கொண்டது. சுழலும் முனைகளிலிருந்து 11" அளவுக்கு அருகில் அமைவது. புவியின் உள்ளகத்தில் கடத்தக்கூடிய இரும்பு நீர்மம் உள்ளது. இதன் இயக்கங்களால் புவிக் காந்தம் ஏற்படுகிறது.
25. வில்லியம் கில்பர்ட்டின் அரும்பணி யாது?
இவர் ஆங்கில இயற்பியலார் (1540 - 1603). புவிக் காந்தத்தை விரிவாக ஆராய்ந்து, காந்தங்களைப் பற்றி என்னும் நூலை 1600இல் வெளியிட்டார். இதில் அவர் தம் ஆய்வு முடிவுகளை விளக்குகிறார். இம்முடிவுகளின் படி புவி ஒரு பெரிய காந்தமாகும்.
26. கதிரவன் முனைப்பு அல்லது முகடு என்றால் என்ன?
பகலவனின் மேல் நிறவெளியில் தற்காலிகமாகத் தோன்றும் வளி முகில். சுற்றுப்புறத்தைக் காட்டிலும் குறைந்த வெப்பநிலையும் அதிக அடர்த்தியும் கொண்டது. ஒளிர் வான நாக்கு போன்ற நீட்சியாக உற்று நோக்கப்படுவது.
27. கதிரவன் காற்று என்றால் என்ன?
கதிரவன் முடிவட்டத்திலிருந்து கோளிடை வெளிக்குச் செல்லும் மின்னேற்றத் துகள்களின் தொடர்ந்த புற ஒட்டம். துகள்கள் பெரும்பாலும் முன்னணுக்களாலும் மின்னணுக்களாலும் ஆனவை. கதிரவன் காந்தப்புலத்தால் துகள்கள் கட்டுப்படுத்தப்படுபவை.
28. கதிரவன் மண்டலம் என்றால் என்ன?
கதிரவன் ஒரு விண்மீன். இதுவும் இதனைச் சார்ந்த 9 கோள்களும் அடங்கிய தொகுதியே இம் மண்டலம்.
29. கதிரவன் மண்டலத் தோற்றக் கொள்கைகள் யாவை?
1. புகைமக் கொள்கை - காண்ட் லேப்லாஸ் முதலியோ ரால் வெளியிடப்பட்டது.
2. ஒதக் கொள்கை - ஜூன், ஜெபர்கன் முதலியோரால் வெளியிடப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி இயற்பியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கதிரவன், என்ன, என்றால், புவிக், புவியின், புவி