வேதியியல் :: உலோகக் கலவை
1. உலோகக் கலவை என்றால் என்ன?
உலோகம் உலோகத்துடனோ உலோகம் மற்றொரு அலோகத்துடனோ சேர்ந்து உண்டாவது, எ-டு இன்வார், பித்தளை, வெண்கலம்.
2. உலோகக் கலவையின் பயன்கள் யாவை?
1. கடினத்தன்மை வாய்ந்தது - சவரன்.
2. உருகு நிலை குறைவு - பற்றியம், உருகிகள்.
3. மின்கடத்தும் திறன் குறைவு - ஜெர்மன் வெள்ளி.
3. உலோகக் கலவையின் பண்புகள் யாவை?
1. உறுதியாக இருப்பதால் நீடித்து உழைக்கும்.
2. விலை குறைவாக இருப்பதால் வாங்குவதற்கேற்றது.
3. உருகுநிலை குறைவாக இருப்பதால் வேலை செய்வதற்கு ஏற்றது.
4. எவர்சில்வர் என்றால் என்ன? பயன்கள் யாவை?
எஃகும் குரோமியம் நிக்கலும் சேர்ந்தது. சமையல் பாண்டம், கத்தி முதலியவை செய்ய.
5. மணி வெண்கலம் என்றால் என்ன?
ஒரு வகை வெண்கலம். மணி வார்க்கப் பயன்படுவது. செம்பு, வெள்ளியம், துத்தநாகம், காரீயம் ஆகியவை கொண்டது.
6. ஜெர்மன் வெள்ளி என்பது என்ன?
பயன்கள் யாவை? நிக்கல், வெள்ளி, துத்தநாகம், செம்பு ஆகியவை சேர்ந்த உலோகக் கலவை. விலை குறைவான அணிகலன்களிலும் இரும்புத் தொழிலிலும் பயன்படுவது.
7. வெடிகுழல் உலோகம் என்றால் என்ன?
துப்பாக்கி உலோகம். செம்பும், வெள்ளியமும் (9:1) துத்தநாகமும் (4%) சேர்ந்த கலவை. துப்பாக்கி செய்ய.
8. சாம்பல் உலோகக் கலவை என்றால் என்ன?
நிலக்கரிக் கனற்சியில் துணை வினைப்பொருள்களில் ஒன்று. வார்ப்புத் தொழிற்சாலைகளின் போட்டித் திறனை உணர்த்துவதில் சிறந்த பங்கு வகிப்பது.
9. தீப்பொறி உலோகக் கலவைகள் யாவை?
தேய்க்கும் பொழுது தீப்பொறிகளை உமிழ்பவை.
10. அச்சு உலோகம் என்றால் என்ன?
ஒர் உலோகக் கலவை. ஆண்டிமனி, வெள்ளியம் ஆகியவை குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்தது. புத்தக எழுத்துக்களில் குறைவாகவும் சில்லறை எழுத்துகளில் அதிகமாகவும் இருக்கும்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகக் கலவை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உலோகக், என்ன, என்றால், யாவை, கலவை, உலோகம், இருப்பதால், ஆகியவை, வெண்கலம், பயன்கள், வெள்ளி