வேதியியல் :: உலோகக் கலவை
11. கறுக்கா எஃகு என்றால் என்ன?
குரோமியம் சேர்ந்த எஃகு துருப்பிடிக்காது. வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுவது.
12. கோவாரின் பயன்கள் யாவை?
கோபால்டு, இரும்பு, நிக்கல் ஆகியவை சேர்ந்த ஒர் உலோகக் கலவை. வெப்பத் திறப்பிகளிலும், படிகப் பெருக்கிகளிலும் பயன்படுவது.
13. டியுராலுமின் என்றால் என்ன?
இது இலேசான உலோகக் கலவை. வானூர்தி, உந்து வண்டிகள் பகுதிகள் செய்யப் பயன்படுவது.
14. இரும்பக உலோகக் கலவைகள் (பெரோ அலாய்ஸ்) என்றால் என்ன?
இரும்பு உலோகக் கலவைகள். இரும்புத் தாதுவையும் உலோகத் தாதுவையும் சேர்த்து உருக்கிச் செய்யப்படு பவை. எ-டு. இரும்பக மாங்கனீஸ் இரும்பகச் சிலிகான் உலோகக் கலவை எஃகுகள் செய்யப் பயன்படுதல்.
15. வெண்கலம் என்றால் என்ன?
செம்பும் துத்தநாகமும் வெள்ளியமும் சேர்ந்த உலோகக் கலவை. சிலைகள், நாணயங்கள், சமையல் பாண்டங்கள் முதலியவை செய்யப் பயன்படுவது.
16. பித்தளை என்றால் என்ன?
3 பங்கு செம்பும், 1 பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை. சமையல் பாண்டங்கள், நாணயங்கள், சிலைகள் செய்யப் பயன்படுவது.
17. மிஷ் உலோகம் என்றால் என்ன? பயன்கள் யாவை?
உலோகக் கலவை. லாந்தனம், செரியம், டைட்டைமியம் ஆகியவை சேர்ந்த கலவை. வளி ஒளி ஏற்றிகள், மின்வாய்கள், துலக்கும் குண்டுகள் முதலியவற்றில் பயன்படுவது.
18. மோனல் உலோகம் என்றால் என்ன?
நிக்கலும் செம்பும் சேர்ந்த கலவை. காடித்தடை உண்டாக்கும் பொருள்கள் செய்ய.
19. மியு மெட்டல் என்றால் என்ன?
ஊடுருவும் தன்மை அதிகங் கொண்ட உலோகக் கலவை. நிக்கல், இரும்பு, செம்பு, மாங்கனீஸ் ஆகியவற்றைக் கொண்டது. மின்மாற்றிகளின் உள்ளகங்களில் பயன்படுவது.
20. முன்ஸ் உலோகம் என்றால் என்ன?
முன்ற பங்கு செம்பும் இரண்டு பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை. ஆல்பா பித்தளையை விட வலுவானது. திருகுகள், மரைகள் செய்யப் பயன்படுவது. முன்ஸ் என்பவர் பெயரால் அமைத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகக் கலவை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உலோகக், கலவை, என்றால், என்ன, பயன்படுவது, செய்யப், பங்கு, செம்பும், உலோகம், துத்தநாகமும், இரும்பு