வேதியியல் :: வேதியியல் துறைகள்
1. வேதியியல் என்றால் என்ன?
தனிமம், சேர்மம் ஆகியவற்றின் பண்புகளையும் இயல்பையும் ஆராயும் துறை. தவிர இது பொருள்களின் சேர்க்கையையும், அவை ஒன்றின் மீது மற்றொன்று ஆற்றும் வினை ஆகியவற்றையும் ஆராய்வது.
2. இது எவ்வகை அறிவியல்?
ஓர் அடிப்படை அறிவியல்.
3. இதன் முக்கியப் பிரிவுகள் யாவை?
இயற்பியல் வேதியியல், கனிம வேதி இயல், கரிம வேதி இயல் எனப் பலவகை.
4. இரசவாதம் என்றால் என்ன?
இரும்பைப் பொன்னாக்கும் கலை. இடைக்கால வேதி இயல். இதுவே பின் வேதியியலாக வளர்ந்தது.
5. இரசவாதி என்பவர் யார்?
இரும்பைப் பொன்னாக்குபவர். சித்தர்கள் இதில் வல்லவர்கள்.
6. மருந்து வேதிஇயல் என்றால் என்ன?
இடைக்கால வேதி இயல்.சில்வியஸ் என்பவரால் ஆய்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவத்தில் மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை முதன்மையாக ஆராய்ந்தது.
7. திண்ம வேதியியல் என்றால் என்ன?
மூலக்கூறுகளில் அணுக்களின் இட அமைவு பற்றி ஆராயுந் துறை.
8. தனிம அளவை இயல் என்றால் என்ன?
தனிமங்கள் சேர்மங்களை உருவாக்கும் அளவுகள்.
9. இயற்பியல் வேதிஇயல் என்றால் என்ன?
வேதி இயைபில் இயற்பியல் பண்புகளின் சார்பு மற்றும் வேதி வினையில் நிகழும் இயற்பியல் மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்வது.
10. கனிம வேதியியல் என்றால் என்ன?
உலோக அலோகத் தனிமங்களையும் அவற்றின் சேர்மங்களையும் ஆராயும் துறை.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதியியல் துறைகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, வேதி, இயல், வேதியியல், இயற்பியல், துறை