வேதியியல் :: வேதிக் கருவிகள்
1. டெட்ரி கிண்ணம் என்பது யாது?
பெட்ரி என்பவர் பெயரால் அமைந்தது. தட்டை அடியுள்ள வட்டக் கண்ணாடிக் கிண்ணம்.
2. புக்கனர் புனல் என்றால் என்ன?
புக்கனர் வைத்துாற்றி உறிஞ்சுதல் மூலம் வடிக்கட்டப் பயன்படும் பீங்கான் புனல்.
3. நைட்ரோமானி என்றால் என்ன?
நைட்ரஜனையும் அதன் சேர்மங்களையும் மதிப்பிடுங் கருவி.
4. வெள்ளி உப்புமானி என்றால் என்ன?
கரைசலிலுள்ள வெள்ளியின் அளவை அளக்கப் பயன்படும் கருவி.
5. உல்ப் குப்பி என்பது என்ன?
இரு கழுத்துள்ள கண்ணாடிச்சிசா. நீர்மத்தின் வழியாக வளியைச் செலுத்தப் பயன்படுவது.
6. புடக்குகை என்றால் என்ன?
பொருள்களை உயர்வெப்பநிலைக்குச் சூடாக்கும் பீங்கான் கிண்ணம்.
7. நிறமானி என்றால் என்ன?
நிறங்களின் செறிவைப் பிரிக்கும் கருவி.
8. லெயிடன் உருளை என்பது யாது?
கண்ணாடி உருளையிலான மின்தேக்கமானி. 1745இல் லெய்டன் என்பவர் அமைத்தது.
9. லிபிக் குளிர்விப்பி என்பது யாது?
லிபிக் என்பவர் ஜெர்மன் கரிம வேதியியலார். இவர் பெயரால் அமைந்தது இக்கருவி. ஆய்வகத்தில் தயாரிக்கும் பொருள் ஆவியாக இருக்குமானால், அதைக் குளிர்வித்து நீர்மமாக்கப் பயன்படுவது.
10. கிப்பின் கருவி என்பது யாது?
வேதிப்பொருள் செய்யப் பயன்படும் ஆய்வகக் கருவி. எ-டு அய்டிரஜன் சல்பைடு.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிக் கருவிகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, கருவி, என்பது, என்றால், யாது, பயன்படும், என்பவர், கிண்ணம்