வேதியியல் :: வேதிக் கருவிகள்
11. ஜெல்டால் குடுவையின் பயன் யாது?
ஜெல்டால் முறையில் நைட்ரஜனை மதிப்பீடு செய்யப் பயன்படுவது. இம்முறை பருமனறி பகுப்பாகும்.
12. உலர்த்துவான் என்றால் என்ன?
ஆவியாதல்மூலம் ஒரு திண்மத்திலிருந்து நீர்மத்தை நீக்கப் பயன்படுங் கருவி. வேதிமுறைகளில் பயன்படுவது.
13. பைடட்குழாய் என்பது யாது?
பாய்ம விரைவை அளக்க உதவுங் கருவி.
14. தெள்ளளவுமானி என்றால் என்ன?
வேதிவினைகள் நடைபெறும் பொழுது வளிப் பருமனால் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியுங் கருவி.
15. உப்புச்செறிவுமானி என்றால் என்ன?
உப்புக்கரைசல்களின் செறிவைக் காணும் கருவி.
16. புன்சன் எரிப்பான் என்றால் என்ன?
எளிய வளிஎரிப்பான். எரிவதற்கு முன் வளியுடன் போதிய அளவுக்குக் காற்றைக் கலக்கக் குறைந்த அளவுள்ள சுடர் உண்டாகும். இதற்குப் புன்சன் சுடர் என்று பெயர். இச்சுடருக்கு அதிக வெப்ப ஆற்றல் உண்டு.
17. உலர்த்தும் பாண்டம் என்றால் என்ன?
வேதிப்பொருள்களை உலர்த்துவதற்குரிய கருவியமைப்பு. இதில் ஈரத்தை உறிஞ்சும்பொருள் கால்சியம் ஆக்சைடு,
18. வடிகட்டி என்றால் என்ன?
ஒரு நீர்மத்திலுள்ள மாசுள்ள தொங்குபொருள்களைப் பிரிக்கப் பயன்படுங் கருவி.
19. வாலை என்றால் என்ன?
நீர்மத்தைக் காய்ச்சி வடிக்கும் கருவியமைப்பு.
20. எதிர்வெப்ப உலை என்றால் என்ன?
தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் உலை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிக் கருவிகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கருவி