வேதியியல் :: வேதிக் கருவிகள்
21. எடையறிமானி என்றால் என்ன?
அளவறி பகுப்பின் ஒரு பிரிவு. அடங்கி இருக்கும் பொருளை உறுதி செய்ய, அதை வேதி இயைபு தெரிந்த ஒரு பொருளாக மாற்றிப் பின் பிரித்துத் துய்மையாக்கி எடையிடப்படுகிறது.
22. மூலக்கூறு எடைமானி என்றால் என்ன?
வளி மூலக்கூறு எடைகளை ஒப்பிடுங் கருவி.
23. கொதிநிலைமானி என்றால் என்ன?
கரைசல்களின் தனிக்கொதிநிலையையும் வேறுபட்ட கொதிநிலையையும் நுண்மையாக அளக்கப் பயன்படுங் கருவி.
24. காற்றுக்குழாய் என்றால் என்ன?
காற்றுக்கம்பம் நிரம்பிய குழாய். ஒரு முனை அல்லது இரு முனைகளும் திறந்திருக்கும்.
25. வளியடுப்பு என்றால் என்ன?
சமையலுக்குப் பயன்படும் அடுப்பு. இதில் நிலக்கரி வளி எரிபொருள்.
26. இடப்பெயர்ச்சி எக்கி என்றால் என்ன?
வேதிநிலையங்களைச் சுற்றியமைந்து நீர்மங்களையும் வளிகளையும் அகற்றப் பயன்படுங் கருவி.
27. ஊதுகுழாய் என்றால் என்ன?
வளியும் காற்றும் சேர்ந்த கலவை அழுத்தத்தில் இக்குழாயிலிருந்து வெளியேற்றப்படும்பொழுது தீச்சுடர் உண்டாகும். ஊதுவிளக்கு.
28. காரமானி என்றால் என்ன?
காரச்செறிவை அளக்கப் பயன்படுங் கருவி.
29. ஊதுலை என்றால் என்ன?
இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் உலை.
30. ஏனைய கருவிகள் யாவை?
பூரட், பிப்பெட், முகவை, கண்ணாடி, உருளிகள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிக் கருவிகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கருவி, பயன்படுங்