வேதியியல் :: வேதி முறைகள்

1. வேதிமுறை என்றால் என்ன?
1. கரைசலிலிருந்து அதன் பகுதிப் பொருள்களைப் பிரித்தல். - உப்புக்கரைசல்.
2. தாதுக்களிலிருந்து உலோகத்தைப் பிரித்தல் - பெசீமர் முறை - எஃகு.
2. வடித்துப்பகுத்தல் என்றால் என்ன?
ஒரு நீர்மக் கரைசலைப் பிரிக்கும் முறை. கடல்நீரைக் காய்ச்சி வடிக்க உப்பு வாலையில் தங்கும்.
3. இதன் வகைகள் யாவை?
1. சிதைத்து வடித்தல் - நிலக்கரி.
2. பகுத்துவடித்தல் - நிலக்கரித்தார்.
3. வெற்றிட வடித்தல் - உயர்வெப்ப நிலையிலுள்ள நீர்மத்தைப் பிரித்தல்.
4. நீராவி வடித்தல் அனிலைன்.
4. உலர் வடித்துப் பகுத்தல் என்றால் என்ன?
ஒரு கெட்டிப் பொருளை வெப்பப்படுத்த ஆவியாகும். அதைச் சுருக்க மீண்டும் அது நீர்மமாகும். எ-டு. கால்சியம் அசெடேட்டை உலர் வடித்துப் பகுக்க அசெடோன் கிடைக்கும்.
5. பகுத்துவடித்தல் என்றால் என்ன?
இரண்டிற்கு மேற்பட்ட கலவாத நீர்மங்கள் சேர்ந்த கலவையை, அந்நீர்மங்களின் வேறுபட்ட கொதிநிலை களில் பகுத்துப் பிரித்தல். எ-டு. பெட்ரோலியம்.
6. பகுத்துப்படிகமாக்கல் என்றால் என்ன?
ஒரு நீர்மத்தில் கரைந்துள்ள இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களைப் பிரிக்கும் முறை. இதில் அவற்றின் வேறுபட்ட கரைதிறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. எ-டு. உப்புக் கரைசலிலுள்ள உப்பைப் படிகமாக்கிப் பிரித்தல்.
7. வீழ்படிவு என்றால் என்ன?
தயிர் போன்று கரையாப் பொருள். வேதிவினையினால் ஒரு கரைசலில் உண்டாவது. எ-டு. அய்டிரோகுளோரிகக் காடியில் வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலைச் சேர்க்க வெள்ளிக் குளோரைடு வீழ்படியும்.
8. வீழ்படிதல் என்றால் என்ன?
வீழ்படிவு உண்டாகும் செயல் வீழ்படிதல் ஆகும்.
9. கழிவுறச் செய்தல் என்றால் என்ன?
1. கரைவதும் கரையாததுமான கனிமக்கலவையைக் கரைப்பான்களோடு சேர்த்து வினைப்படுத்தும் முறை.
2. பொன் முதலிய விலை உயர்ந்த உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கும் முறை.
10. வெற்றிட வடித்துப்பகுத்தல் என்றால் என்ன?
குறைந்த அழுத்தத்தில் நீர்மங்களை வடிக்கும் முறை. இதனால் கொதிநிலை உயரும் அல்லது தாழும். இது நீர்மக் கலவையைப் பிரிக்கும் முறை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதி முறைகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, முறை, பிரித்தல், பிரிக்கும், வடித்தல்