வேதியியல் :: வேதி முறைகள்

61. இம் முறையைப் புனைந்தவர் யார்?
ஷெராடு. ஆகவே இதற்கு ஷெராடைசிங் என்று பெயர்.
62. மாண்ட் முறை என்றால் என்ன?
தூய நிக்கலைப் பெறும் தொழிற்சாலை முறை.
63. பார்க் முறை என்றால் என்ன?
காரீயத்தைத் துய்மையாக்கும் முறை.
64. பெசிமர் முறை என்பது யாது?
எஃகு தயாரிக்கும் முறை.
65. சீக்களர் முறை என்றால் என்ன?
உயரடர்த்தி பாலியீத்தின் தயாரிக்கும் தொழிற்சாலை முறை.
66. இம்முறையில் வினையூக்கிகள் யாவை?
டிட்டானியம் குளோரைடு, அலுமினியம் அல்கைல்கள்.
67. இதை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஜெர்மன் வேதியியலார் சீக்ளர் 1953இல் இதை அறிமுகப் படுத்தினர்.
68. சயனமைடு முறை என்றால் என்ன?
தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரிக்கும் முறை. இதில் பொட்டாசியம் சயனைடு கரைசல் பயன்படுத்தப் படுகிறது.
69. குயுமினி முறை என்றால் என்ன?
பினால் செய்யும் முறை.
70. ஹேபர் முறை என்றால் என்ன?
தொழில் முறையில் அம்மோனியா உண்டாக்கும் முறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதி முறைகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - முறை, என்ன, என்றால்