வேதியியல் :: வேதி முறைகள்

51. நாகமுலாம் இரும்பு என்றால் என்ன?
கந்தக்காடியில் துப்புரவு செய்த உருகிய துத்தநாகத்தில் இரும்பு தோய்த்து எடுக்கப்படுகிறது. இதுவே நாகமுலாம் இரும்பு.
52. கந்தக ஏற்றம் என்றால் என்ன?
கந்தகத்தையும் அதன் கூட்டுப் பொருள்களையும் ஆக்சிஜன் ஏற்றம் செய்து சல்பேட் உப்புகளைப் பெறுதல். மண்ணில் இது குச்சிவடிவ உயிர்களால் நடைபெறுவது.
53. கார்பாக்சைல் நீக்கம் என்றால் என்ன?
கரிமக்காடியின் கார்பாக்சைல் தொகுதியிலிருந்து கரி ஈராக்சைடை நீக்குதல்.
54. இயல்பு நீக்குதல் என்றால் என்ன?
மெத்தனால், பைரிடின் முதலிய இயல்பு நீக்கிகளைச் சேர்த்து, ஈத்தைல் ஆல்ககாலைக் குடிப்பதற்குத் தகுதியற்ற தாக்குதல்.
55. நைட்ரேட்டு நீங்குதல் என்றால் என்ன?
சில குச்சி வடிவ உயிர்கள் உயிர்ப்பினால் மண்ணிலிருந்து நைட்ரேட்டு உப்புகளை நீக்குதல்.
56. நிலை இறக்கம் என்றால் என்ன?
இது ஒரு வேதிவினை. இதில் வழக்கமாக ஒரு மூலக்கூறு பல படிநிலைகளில் எளிய மூலக்கூறுகளாகச் சிதையும். எ-டு. அமைடுகளின் ஆஃப்மன் நிலை இறக்கம்.
57. நீர்நீக்கல் என்றால் என்ன?
ஒரு பொருளிலிருந்து நீரை வெளியேற்றுதல்.
58. நீர்த்தல் என்றால் என்ன?
சில படிககங்கள் நீரை ஈர்த்தல். எ-டு. சுட்டசுண்ணாம்பு.
59. உருக்கல் என்றால் என்ன?
ஊதுலையில் ஒர் உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுத்தல். எ-டு. செம்பு அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுதல்.
60. துத்தநாகம் பூசல் என்றால் என்ன?
காற்றில்லாமல் துத்தநாகத்துளை வெப்பப்படுத்தி துத்தநாகப் பூச்சு பூசுதல். வில் சுருள்கள், திருகாணிகள் முதலியவை செய்வதில் இம்முறை பயன்படுதல். இப் பொருள்கள் அரிமானத்தடை உள்ளவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதி முறைகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், நீக்குதல், இரும்பு