யோனாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 3
2 நீ புறப்பட்டு நினிவே என்னும் மாநகருக்குப் போய் நாம் உனக்குச் சொல்லும் தூதுரையை அவர்களுக்கு அறிவி" என்றார்.
3 யோனாஸ் உடனே புறப்பட்டு ஆண்டவருடைய வார்த்தையின் படியே நினிவே நகருக்குப் போனார்@ நினிவே ஒரு மாபெரும் நகரம்@ அதன் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்குச் செல்ல மூன்று நாளாகும்.
4 யோனாஸ் நகருக்குள் நுழைந்து, ஒருநாள் பயணம் செய்து, உரத்த குரலில், "இன்னும் நாற்பது நாட்களில் நினிவே வீழ்த்தப்படும்" என்று அறிவித்தார்.
5 நினிவே மக்கள் கடவுளை விசுவசித்தனர்@ உடனே, உண்ணா நோன்பு இருக்கும்படி அறிக்கையிட்டனர்@ பெரியோர் முதல் சிறியோர் ஈறாக அனைவரும் கோணியுடுத்திக் கொண்டனர்.
6 இந்தச் செய்தி நினிவே மன்னனுக்கு எட்டிற்று@ அவனும் தன் அரியணையை விட்டிறங்கி, அரச ஆடையை அகற்றி விட்டு கோணியுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான்.
7 மேலும் அறிக்கையொன்று தயாரித்து நினிவே முழுவதும் விளம்பரப்படுத்தச் சொன்னான்: &ququot;அரசர், அவர் அமைச்சர்கள் ஆகியோரின் ஆணையாவது: மனிதனோ மிருகமோ ஆடு மாடுகளோ எதையும் சுவைத்தலாகாது@ உண்ணவோ நீர் பருகவோ கூடாது.
8 மனிதன், மிருகம் எல்லாருமே கோணியாடை உடுத்திக் கொண்டு, கடவுளை நோக்கி உரத்த குரலில் கூவியழைக்கட்டும்@ ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டுத் திரும்பட்டும்@ தன் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டொழிக்கட்டும்.
9 அப்போது ஒரு வேளை ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, தம் கடுஞ்சினத்தை அமர்த்தக் கூடும்@ நாமும் அழியாமல் தப்புவோம்."
10 அவர்கள் செய்ததைக் கடவுள் கண்டு, அவர்கள் தங்கள் தீநெறியை விட்டுத் திரும்பியதை அறிந்தார்@ தாம் அவர்களுக்குச் செய்யப் போவதாகச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்துக் கடவுள் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யோனாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, நினிவே, யோனாஸ், ஏற்பாடு, பழைய, கொண்டு, ஆகமம், கடவுளை, மாற்றிக், கடவுள், ", மனத்தை, விட்டுத், உடனே, ஆன்மிகம், திருவிவிலியம், ஆண்டவர், புறப்பட்டு, உரத்த, குரலில்