யோனாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 2
2 யோனாஸ் அந்த மீன் வயிற்றிலிருந்து கொண்டு தம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டிக் கொண்டார்:
3 என் வேதனையின் போது என் ஆண்டவரிடம் கூக்குரலிட்டேன், அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்@ பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூவினேன், நீர் என் குரலைக் கேட்டருளினீர்.
4 நடுக்கடலின் ஆழத்தில் நீர் என்னைத் தள்ளினீர், வெள்ளம் என்னைச் சூழ்ந்து கொண்டது@ உம்முடைய அலைகள், திரைகள் அனைத்தும் என் மேல் புரண்டு கடந்து போயின.
5 அப்பொழுது நான், ~ உமது திருமுன்னிருந்து புறம்பே எறியப்பட்டேன்@ இனி எவ்வாறு உம் பரிசுத்த கோயிலை மறுபடியும் பார்ப்பேன்?~ என்று முறையிட்டேன்.
6 மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை நெருக்கிற்று, கடலாழத்தில் நீர் சூழ, நான் இருந்தேன். கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.
7 மலைகளின் அடிவாரம் செல்லும் ஆழம் வரை, நிலத்தின் அடிக்குள் நான் இறங்கி விட்டேன், பாதாளத்தின் தாழ்ப்பாள் என்றென்றைக்கும் என்னை அடைத்தது@ ஆயினும் என் கடவுளாகிய ஆண்டவரே, பாதாளப் படுகுழியிலிருந்து நீர் என்னுயிரை மீட்டு வந்தீர்.
8 என் ஆன்மா எனக்குள் சோர்ந்து போகும் போது ஆண்டவரை நான் நினைவுகூர்ந்தேன்@ என் மன்றாட்டு உம் வரைக்கும் உம்முடைய பரிசுத்த கோயிலுக்குள் வந்தது.
9 ஒன்றுக்கும் பயன்படாத சிலைகளுக்குப் பணிபுரிவோர் அருளின் ஊற்றைக் கைவிடுகின்றனர்.
10 நானோ புகழ்ப்பாடலுடன் உமக்குப் பலியிடுவேன், நான் நேர்ந்து கொண்டதை உமக்குச் செலுத்துவேன்@ மீட்பு ஆண்டவரிடமிருந்தே வருகிறது!"
11 ஆண்டவர் அந்த மீனுக்குக்குக் கட்டளையிட, அது யோனாசைக் கடற்கரையில் கக்கி விட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யோனாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, நான், ஏற்பாடு, நீர், பழைய, யோனாஸ், ஆகமம், அந்த, பாதாளத்தின், பரிசுத்த, என்னை, போது, உம்முடைய, மூன்று, ஆன்மிகம், திருவிவிலியம், ஆண்டவர், மீன், கடவுளாகிய, வயிற்றிலிருந்து, ஆண்டவரை