யோபு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 42
2 நீர் எல்லாம் செய்ய வல்லவர் என்பதையும் எந்தத் திட்டமும் உம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதன்று என்பதையும் நானறிவேன்.
3 அறிவில்லாத சொற்களால் நம் ஆலோசனையை இருளாக்கிவிட்டவன் யார்?~ என்றீரே, நான் தான் அவன். எனக்குத் தெரியாததை நான் தான் உளறி விட்டேன். எனக்கு எட்டாத விந்தைகளைப் பற்றிப் பிதற்றி விட்டேன்.
4 செவி கொடுத்துக் கேள், நாம் பேசுவோம்@ நாம் வினவுவோம், நீ விடைகூறு~ என்றீரே.
5 உம்மைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் காதால் கேட்டதே@ இப்பொழுதோ உம்மை என் கண்கள் கண்டன.
6 ஆதலால் என்னையே நான் கடிந்து கொள்கிறேன், புழுதியிலும் சாம்பலிலும் அமர்ந்து மனம் வருந்துகிறேன்" என்றார்.
7 யோபுவுக்கு இவ்வாறு கூறிய பிறகு, ஆண்டவர் தேமானியனான ஏலிப்பாசை நோக்கி, "உன் மேலும் உன் நண்பர்கள் இருவர் மேலும் நாம் மிகுந்த சினம் கொண்டுள்ளோம்@ ஏனெனில் நம் ஊழியனாகிய யோபு பேசியது போல் நீங்கள் நம்மைப் பற்றி நேர்மையானவற்றைப் பேசவில்லை.
8 ஆதலால் இப்பொழுது ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் தேர்ந்தெடுத்து நம் ஊழியனாகிய யோபுவிடம் கொண்டு போங்கள்@ அங்கே அவற்றை உங்களுக்காகத் தகனப்பலியாய் ஒப்புக் கொடுங்கள்@ நம் ஊழியனாகிய யோபு உங்களுக்காக வேண்டிக்கொள்வான்@ அப்போது அவன் மன்றாட்டை ஏற்றுக்கொண்டு, உங்கள் மடமைக்காக உங்களைக் கடுமையாய் நடத்தாமல் விட்டுவிடுவோம்@ ஏனெனில் நம் ஊழியனாகிய யோபு பேசியது போல் நீங்கள் நம்மைப் பற்றி நேர்மையானவற்றைப் பேசவில்லை" என்று சொன்னார்.
9 அப்போது, தேமானியனான ஏலிப்பாசும், சுகீத்தனான பால்தாத்தும், நாமாத்தித்தனான சோப்பாரும் புறப்பட்டுச் சென்று ஆண்டவர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்@ ஆண்டவரும் யோபுவின் மன்றாட்டைக் கேட்டருளினார்.
10 யோபு தம் நண்பர்களுக்காக வேண்டிக் கொண்ட பின்பு, ஆண்டவர் அவருடைய செல்வச் சிறப்புகளை மீண்டும் தந்தருளினார்@ யோபு முன்னர் கொண்டிருந்ததைப் போல் இரு மடங்கு அவருக்குக் கொடுத்தார்.
11 அவருடைய சகோதர சகோதரிகள் எல்லாரும், இன்னும் முன்பு அவருக்கு அறிமுகமாயிருந்த அனைவரும் அவர் வீட்டுக்கு வந்து அவரோடு விருந்துண்டனர். அவருக்கு ஆண்டவர் வருவித்த தீமைகள் அனைத்திற்காகவும் அனுதாபம் தெரிவித்து அவரைத் தேற்றினார்கள்@ அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வெள்ளிக் காசும் தங்க மோதிரமும் அவருக்குக் கொடுத்தனர்.
12 ஆண்டவரோ முன் நிலைமையைக் காட்டிலும் யோபுவின் பின் நிலைமையை மிகுதியாக ஆசீர்வதித்தார்@ பதினாலாயிரம் ஆடுகளும் ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவருக்குச் சேர்ந்தன.
13 மேலும் அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தார்கள்.
14 மூத்த மகளுக்கு ~மாடப்புறா~ என்றும், இரண்டாம் மகளுக்குப் ~பரிமளம்~ மூன்றாம் மகளுக்கு ~அஞ்சனச்சிமிழ்~ என்றும் பெயரிட்டார்.
15 யோபுவின் புதல்வியரைப் போல் அழகு வாய்ந்த பெண்கள் நாடெங்கணும் இருந்ததில்லை@ அவர்களுடைய தந்தை அவர்களின் சகோதரருக்குக் கொடுத்தது போலவே அவர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்தார்.
16 அதன் பிறகு யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்து, நான்காம் தலைமுறை வரையில் தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் கண்டு களித்தார். இறுதியாக யோபு முதுமையடைந்து, நிறைந்த ஆயுள் உள்ளவராய் இறைவனடி சேர்ந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யோபு ஆகமம் - பழைய ஏற்பாடு, யோபு, ஏற்பாடு, நான், ஆண்டவர், ஊழியனாகிய, போல், பழைய, ஆகமம், நாம், மேலும், அவருக்கு, பற்றி, யோபுவின், அப்போது, நேர்மையானவற்றைப், அவருக்குக், என்றும், பிள்ளைகளையும், மகளுக்கு, ஆயிரம், நம்மைப், கொடுத்தார், அவருடைய, தேமானியனான, என்றீரே, தான், என்பதையும், ஆன்மிகம், திருவிவிலியம், அவன், விட்டேன், பேசியது, ஏனெனில், பிறகு, ஆதலால், நீங்கள்