யோபு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 40
2 அவர் சொன்னது: "வீரனைப் போல் உன் இடையை வரிந்து கட்டிக்கொள், நாம் உன்னை வினவுவோம், நீ விடை கூறு.
3 நாம் செய்தது சரியன்று என நீ காட்டுவாயோ? நீ குற்றமற்றவன் என்றெண்பிக்க நம்மைக் குற்றவாளியாக்குவாயோ?
4 கடவுளுக்கு இருப்பது போல் உனக்குக் கைவன்மையுண்டோ? அவரைப் போல் நீயும் இடி முழக்கமாய்ப் பேசக்கூடுமோ?
5 மகிமையாலும் மேன்மையாலும் உன்னை அணி செய்துகொள், மகிமையையும் ஒளியையும் உடுத்திக்கொள்.
6 உன்னுடைய கடுஞ்சினத்தை எங்கணும் கொட்டி, செருக்குற்றோர் அனைவரையும் உன் பார்வையால் தாழ்த்து@
7 செருக்குற்றோர் அனைவரையும் உன் பார்வையால் வீழ்த்து@ பொல்லாதவர்களை அவர்கள் இடத்திலேயே மிதித்துப்போடு.
8 அவர்களையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துப் புழுதியில் புதை@ அவர்கள் முகங்களைக் கட்டி ஆழ்குழியில் தள்ளு.
9 அப்பொழுது தான் உன் வலக்கை உனக்கு வெற்றி தரக்கூடியது என்பதை நாம் ஒப்புக்கொள்வோம்.
10 நீர்யானையைக் கவனித்துப் பார்@ உன்னை உண்டாக்கினது போலவே அதையும் உன்டாக்கினோம்@ எருதைப் போல் அது புல் தின்கிறது.
11 இதோ, ஆற்றல் அதனுடைய இடுப்பிலும், அதன் வலிமை வயிற்றுத் தசை நார்களிலும் உள்ளன.
12 தன் வாலை கேதுரு மரத்தை போல் விறைக்கும், அதன் தொடை நரம்புகள் கயிறு போல் பின்னியிருக்கும்.
13 அதன் எலும்புகள் வெண்கலக் குழாய்கள் போலும், அதன் உறுப்புகள் இருப்புக் கம்பிகள் போலும் உள்ளன.
14 கடவுளின் கைவேலைகளில் தலை சிறந்தது அதுவே@ ஆனால் அதை உண்டாக்கியவர் வாளால் அதை அச்சுறுத்தினார்.
15 மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கின்றன, கொடிய மிருகங்கள் யாவும் அங்கே விளையாடுகின்றன.
16 தாமரைச் செடிகளின் கீழும் நாணல்களின் மறைவிலும் சதுப்பு நிலத்திலும் அது படுத்துக் கிடக்கும்.
17 தாமரை இலைகள் அதற்கு நிழல் தருகின்றன, நீரோடையின் ஓரத்திலுள்ள அலரிகள் அதைச் சூழ்ந்திருக்கும்.
18 இதோ, வெள்ளம் பெருக்கெடுத்தாலும் அது அஞ்சாமலிருக்கிறது@ யோர்தான் அதன் முகத்தில் மோதினாலும் அது கவலைப்படுகிறதில்லை.
19 தூண்டிலால் யாரேனும் அதைப்பிடிக்கக் கூடுமா? அல்லது மண்டா பாய்ச்சி அதன் மூக்கைத் துளைக்க முடியுமா?
20 மீன் தூண்டிலால் லெவீயாத்தானை உன்னால் பிடிக்கக்கூடுமோ? அதன் நாக்கைக் கயிற்றால் கட்ட உன்னால் இயலுமோ?
21 அதற்கு மூக்கணாங்கயிறு போட உன்னால் முடியுமோ? அல்லது குறட்டினால் அதன் தாடையைத் துளைக்கலாகுமோ?
22 உன்னை நோக்கி அது கெஞ்சி மன்றாடுமோ? உன்னிடம் இன் சொற்களைப் பேசுமோ?
23 எந்நாளும் அதை உன் ஊழியனாய் நீ வைத்துக் கொள்ளும்படி உன்னோடு அது ஒப்பந்தம் செய்து கொள்ளுமோ?
24 பறவையோடு விளையாடுவது போல் அதனோடும் விளையாடுவாயோ? உன் பெண் மக்களுக்கு அதை வாரால் கட்டி, விளையாட்டுப் பொருளாகக் கொடுப்பாயோ?
25 வணிகர்கள் அதை விலைக்குக் கேட்பார்களோ? வியாபாரிகளுக்குள் அதைக் கூறுபோட்டுப் பிரித்துக் கொள்வார்களோ?
26 எறிபடைகளால் அதன் தோலைக் குத்தி நிரப்புவாயோ? மீன் வல்லயத்தால் அதன் தலையைக் குத்துவாயோ?
27 அதன் மேல் உன் கைகளை வைத்துப்பார்@ எழும்பும் மல்லாட்டத்தை ஒருபோதும் மறவாய்@ மறுபடி அவ்வாறு செய்ய நீ நினைக்க மாட்டாய்!
28 இதோ, அதைப் பிடிக்கலாமென நம்புகிறவன் ஏமாந்து போகிறான், அதைப் பார்த்ததுமே அவன் அஞ்சித் தளர்வான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யோபு ஆகமம் - பழைய ஏற்பாடு, போல், ஏற்பாடு, பழைய, உன்னை, நாம், யோபு, அதற்கு, ஆகமம், உன்னால், தூண்டிலால், அல்லது, அதைப், மீன், செருக்குற்றோர், ஆன்மிகம், திருவிவிலியம், அனைவரையும், பார்வையால், கட்டி, போலும்