பாரூக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 5
2 ஆண்டவர் உனக்கு அருளும் நீதியை ஆடையாய் உடுத்திக் கொள்@ நித்தியமானவரின் மகிமையை மணி முடியாய் அணிந்து கொள்.
3 உலகமெலாம் காணும்படி கடவுள் உன்னுடைய ஒளியினைக் காட்டிடுவார்.
4 எந்நாளும் நிலைக்கும்படி கடவுள் உனக்கு இடும் பெயர்கள், ~நீதியின் அமைதி, இறைப்பற்றின் மகிமை~ என்பனவாம்.
5 யெருசலேமே, எழுந்திரு, உயரத்தில் எழுந்து நில், கிழக்குத் திசையை நோக்கிப் பார்@ மேற்றிசை முதல் கீழ்த்திசை வரையில் இருந்த உன் குழந்தைகள் பரிசுத்தரின் வார்த்தையால் ஒன்றாய்க் கூடிக் கடவுள் தங்களை நினைவு கூர்ந்ததற்காக மகிழ்ந்து கொண்டு வருகிறார்கள்.
6 அவர்கள் உன்னை விட்டு அகலும் பொழுது, தாங்கள் பகைவர்களால் கால் நடையாய் நடத்திச் செல்லப்பட்டார்கள்@ ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்பச் செய்யும் பொழுது, அரசுக்குரிய மக்களைப் போல மகிமையோடு கொண்டு வரப்படுவார்கள்.
7 ஏனெனில் கடவுளின் மகிமையோடு இஸ்ராயேல் தீங்கற்ற வழியில் தாராளமாய் நடக்கும்படி, உயர்ந்த மலைகளையும் அழியாத குன்றுகளையும் தாழ்த்திப் பள்ளத்தாக்குகளை நிரப்பிச் சமநிலமாக்கும்படி கடவுள் கட்டளை கொடுத்தார்.
8 காடுகளும் நறுமணம் வீசும் மரங்களும் கடவுளின் கட்டளையால், இஸ்ராயேலுக்கு இனிய நிழலைத் தந்தன.
9 ஏனெனில் கடவுள் தம் மகிமையின் வெளிச்சத்தில் இஸ்ராயேலை அகமகிழ்ச்சியோடும், தம்மிடத்திலிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் கூட்டிக் கொண்டு வந்து சேர்ப்பார்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாரூக் ஆகமம் - பழைய ஏற்பாடு, கடவுள், ஏற்பாடு, பழைய, ஆகமம், பாரூக், கொண்டு, உனக்கு, மகிமையோடு, ஏனெனில், கடவுளின், பொழுது, திருவிவிலியம், ஆன்மிகம், அருளும், உன்னை, யெருசலேமே