எக் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள் :
பாஸ•மதி அரிசி - 1 1/2 கோப்பை
முட்டை - 4
உப்பு - சிறிதளவு
வெங்காயம் - 8
எண்ணெய் - தேவையான அளவு
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
ஸோயாஸாஸ் - 4 மேஜைக் கரண்டி
வெங்காயத் தாள் - 1
முன்னேற்பாடு - 1
அரிசியைக் சாதமாக வடிக்கவும் (உதிரி உதிரியாக இருக்க வேண்டும்)
முன்னேற்பாடு - 2
இரண்டு முட்டைகளை நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பைப் போடவும்.
நன்றாகக் கலக்கியவுடன் ஒரு தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி இந்த முட்டைக் கலவையை மிக மெல்லிய ஆம்ப்லெட்டாகப் போடவும்.
ஆம்ப்லெட்டை நன்றாகச் சுருட்டி, பின் அரைகனமுள்ள துண்டுகளாகப் போட்டுக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 3
வெங்காயத்தைக் கழுவி, தோல் நீக்கி, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் போட்டு, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காயவிடவும்.
காய்ந்தவுடன் அதில் வெங்காயத்தைப் போட்டு தணலை அதிகப்படுத்தி ஒரே ஒரு நிமிடம் வதக்கவும்.
முன்னேற்பாடு - 4
இப்போது மீதி இருக்கும் இரண்டு முட்டைகளை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்
இதனை வெங்காயத்தில் சேர்க்கவும்
தயாரிப்பு முறை :
மேலே சொல்லப்பட்ட கலவையில், பச்சைக் கற்பூரத்தைப் போடவும்
இதன் பின், ருசிக்கு எவ்வளவு உப்புத் தேவையோ அதையும் போடவும்
எல்லாவற்றையும் விடாமல் கிளறி விடவும்
பின்னர் வடித்து வைத்திருக்கும் சாதத்தை எடுத்து அதில் கொட்டவும்
ஸோயா சாஸையும் ஊற்றவும்
வெங்காயத் தாளையும் வெட்டிப் பரிமாறவும்
இதன் பின் மீண்டும் ஐந்து நிமிடங்கள் வரை கிளறிக் கொடுக்கவும்.
இதன் பின் ஒர பரவலான தட்டில் இதைக் கொட்டவும்
ஆம்ப்லேட் துண்டுகளை மேலே தூவவும். பின்னர் பரிமாறவும்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எக் ஃப்ரைட் ரைஸ், 65 வகையான உணவுகள், 65 Type Recipes, போடவும், பின், அதில், கொள்ளவும், சிறிதளவு, முன்னேற்பாடு, இதன், எண்ணெய், Recipies, சமையல் செய்முறை