தேங்காய் பர்ப்பி
இதற்குத் தேவையான பொருட்கள்: அஸ்கா சர்க்கரை, தேங்காய்பூ திருகல், வர்ணப் பொடி ஆகியவை.
சர்க்கரையை அடுப்பில் வைத்துப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளுதல் வேண்டும்.
தேங்காயைத் திருகிப் பூவெடுத்துப் பாலைப் பிழிந்து எடுத்துவிட்டு, சக்கையை மட்டும் அந்தப் பாகில் கொட்டிக் கிண்டுதல் வேண்டும்.
வர்ணப் பொடியை இரண்டு அல்லது மூன்று சிட்டிகையை எடுத்து, தேங்காய்ப்பூ சக்கையைக் கலக்கு முன் ஜீராவில் போட்டுக் கலந்து கொள்ளுதல் வேண்டும். அதன் பின்னர் தேங்காய்ப் பூவைப் போட்டுக் கிளறி சத்தம் அடங்கிய பதத்தில் கீழே இறக்கி, சட்டம் பதித்த பலகையில் விட்டு ஆறிய பின்னர் கத்தியால், தேவையான அளவில் துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
தேங்காய் பர்ப்பியில் மஞ்சள் நிறம் இருக்க வேண்டும் என்று விரும்பினால், சர்க்கரைப் பாகில் கேசரிப் பவுடர் சிறிது கலந்து கொள்ளுதல் வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேங்காய் பர்ப்பி, 65 வகையான உணவுகள், 65 Type Recipes, வேண்டும், கொள்ளுதல், Recipies, சமையல் செய்முறை