முதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 65 வகையான உணவுகள் » டைஸ்ட் சிக்கன் க்யூப்ஸ் வித் மஷ்ரூம்ஸ்
டைஸ்ட் சிக்கன் க்யூப்ஸ் வித் மஷ்ரூம்ஸ்
தேவைப்படும் பொருட்கள் :
1. கோழிக்கறி -1/2 கிலோ
2. உப்பு - ருசிக்கேற்ப
3. சோளமாவு - 1 மேஜைக்கரண்டி
4. காளான் - 1/2 கிலோ
5. வெண்ணெய் - 1 1/2 மேஜைக் கரண்டி
6. சமையல் எண்ணெய் - 50 மி.லி
7. வெங்காயம் - 1
8. இஞ்சி - 1 சிறு துண்டு
9. வெள்ளைப்பூண்டு - 1 பல்
10. சோயா ஸாஸ் - 2 1/2 மேஜைக் கரண்டி
11. ஷெர்ரி - 1 மேஜைக் கரண்டி
12. சர்க்கரை - 1 1/2 மேஜைக்கரண்டி
13. தக்காளிப் பழம் - 1
முன்னேற்பாடு - 1
1. கறியை நன்றாகக் கழுவவும்
2. துண்டுகளாக்கிக் கொள்ளவும்
முன்னேற்பாடு - 2
1. ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான் நீரை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் காளான்களைப் போடவும்
3. இருபது நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
4. ஊறியவுடன் காளான்களை வெளியே எடுத்துத் தண்டுகளை நீக்கவும்.
5. பின்னர் அவற்றைச் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 3
1. வெங்காயத்தைக் கழுவவும்.
2. தோல் நீக்கவும்.
3. சின்னச் சின்னத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 4
1. இஞ்சியை நன்றாகக் கழுவவும்.
2. மேல் தோலைக் கத்தியால் சுரண்டி நீக்கி விடவும்.
முன்னேற்பாடு - 5
வெள்ளைப் பூண்டைத் தோல் உரித்துக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 6
1. தக்காளியைக் கழுவவும்.
2. அதன் மேல் தோலை நீக்கவும்.
3. அம்மியில் வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 7
1. கழுவி வைத்திருக்கும் கறியை ஒரு பாத்திரத்தில் போடவும்.
2. அதில் சோளமாவைப் போடவும்.
3. ருசிக்குத் தேவையான அளவு உப்புச் சேர்க்கவும்.
முன்னேற்பாடு - 8
1. அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும்
2. கல் காய்ந்தவுடன், வெண்ணெயை அதில் ஊற்றவும்.
3. வெண்ணெய் சூடேறியவுடன், நறுக்கி வைக்கப் பட்டிருக்கும் காளானை அதில் போடவும்.
4. நன்றாக வதக்கவும்.
5. வதங்கிய பின் அதைத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முன்னேற்பாடு - 9
1. அடுப்பின் மேல் உள்ள வாணலியில் சமையல் எண்ணெய் ஒன்றரைத் தேக்கரண்டி விடவும்.
2. அது காய்ந்தவுடன், ஊற வைத்திருக்கும் கறித் துண்டுகளை எடுத்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும்.
3. வதக்கிய பின் அதைத் தனியே எடுத்து வைக்கவும்.
தயாரிப்பு முறை :
1. இப்போது அதே வாணலியிலேயே இரண்டரை மேஜைக் கரண்டி சமையல் எண்ணெய் விடவும்.
2. எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை எடுத்து அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
3. வதங்கிய பின்னர் இஞ்சியை வதக்கவும்.
4. பூண்டையும் சேர்த்துக் கொள்ளவும்.
5. இதன் பின் எடுத்து வைத்திருக்கும் இறைச்சியை அதில் போட்டு விடவும்.
6. இத்துடன் ஸோயா ஸாஸை விடவும்.
7. ஷெர்ரியையும் போடவும்.
8. இத்துடன் சர்க்கரையையும் கலந்து கொள்ளவும்.
9. கூடவே தக்காளி விழுதையும் கூட்டிக் கொள்ளவும்.
10. எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும்.
11. இந்தக் கலவை பாதியளவு சுண்டும் வரை பொறுக்கவும்
12. இதன்பின், அதிலிருக்கும் இறைச்சித் துண்டுகளை மட்டும் வெளியே எடுத்து அகலமான தட்டில் வைக்கவும்.
13. மீதி இருக்கக் கூடிய மசாலாவில், எடுத்துவைத்திருக்கும் காளான்களைக் கொட்டி நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
14. காளான்கள் வதங்கியவுடன், அதை எடுத்துத் தட்டில் உள்ள இறைச்சியின் ஓரங்களில் அழகாக அடுக்கவும்.
15. பின் பரிமாறவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
டைஸ்ட் சிக்கன் க்யூப்ஸ் வித் மஷ்ரூம்ஸ், 65 வகையான உணவுகள், 65 Type Recipes, கொள்ளவும், முன்னேற்பாடு, அதில், எடுத்து, விடவும், போடவும், கழுவவும், வதக்கவும், பின், மேஜைக், கரண்டி, எண்ணெய், நன்றாக, காய்ந்தவுடன், நீக்கவும், சமையல், மேல், வைத்திருக்கும், வைக்கவும், Recipies, சமையல் செய்முறை