ஏங்க என்னாச்சு? - சர்தார்ஜி ஜோக்ஸ்
நாலு சர்தார்ஜிக்கள் ரயில்வே பிளாட்பாரத்துல "பஞ்சாப் மெயில்"ங்கிற வண்டிக்காகக் காத்துட்டிருகாங்க.
அப்ப ரயில் காலதாமதமா ஓடிட்டு இருக்கு அது வர்ற இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்னு ஒரு அறிவிப்பு பண்ணறாங்க.
அதான் இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே? வெளியிலே போய் எங்கேயாச்சும் சுத்திட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்னு நாலு பேரும் கெளம்பி வெளியே போயிடறாங்க.
அவங்க சுத்திட்டு திரும்பவும் ஸ்டேசனுக்கு வந்து பாத்தா பஞ்சாப் மெயில் வேகம் எடுத்து கெளம்பி போயிட்டு இருக்கு.
நாலு பேருல ஒருத்தரு ஓடிப் போய் ஒரு பெட்டியில ஏறிக்கிறாரு.
இன்னொருத்தரும் அதே மாதிரி தலை தெறிக்க ஓடி கடைசி பெட்டியில ஏறிக்கிறாரு.
மத்த ரெண்டு பேரும் ஏற முடியாம நின்னுடறாங்க.
குடுகுடுன்னு ஓடிப் போய் ஏறுன அந்த ரெண்டு பேரும் ரயில்வண்டிக்குள்ளேயே சந்திச்சிக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் பாத்ததும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிடறாங்க.
அப்ப அங்க பக்கத்துல இருந்தவரு"ஏங்க என்னாச்சு? ஏன் இப்படி சிரிக்கிறீங்க"ன்னு கேட்டாராம்.
அதுக்கு ஒரு சர்தார்ஜி சொன்ன பதில்"வழியனுப்ப வந்த நாங்க ரெண்டு பேருமே ஏறிட்டோம்...
பஞ்சாப் மெயில் ஏறி ஊருக்குப் போக வேண்டிய ரெண்டு பேரும் கீழேயே நிக்கிறானுங்க"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 106 | 107 | 108 | 109 | 110 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏங்க என்னாச்சு? - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், ரெண்டு, சர்தார்ஜி, jokes, என்னாச்சு, ஏங்க, பேரும், போய், நேரம், நாலு, பஞ்சாப், கெளம்பி, ஏறிக்கிறாரு, பெட்டியில, ஓடிப், மெயில், இருக்கு, சிரிப்புகள், நகைச்சுவை, அப்ப, இன்னும், சுத்திட்டு