என்னப்பா என்னாச்சு? ஏன் டென்சனா இருக்கே? - சர்தார்ஜி ஜோக்ஸ்
குர்பசன் சிங் அப்படிங்கிற சர்தார்ஜி பல்கலைக்கழகத் தேர்வு எழுதிட்டு இருந்தாராம்.
கேள்விகள் எல்லாமே ஆம்/இல்லைன்னு பதில் சொல்ற ரகம். பரிட்சை கூடத்துல நம்மாளு போய் ஒக்காருறாரு, அஞ்சு நிமிஷம் கேள்வித் தாளைப் பாக்குறாரு.
அதுக்கப்புறம் ஒரு வேகம் வந்தவரா, தன்னோட பேண்ட் பாக்கெட்லருந்து ஒரு காசு எடுத்து சுண்டி போட்டு தலை விழுந்துதுன்னா ஆம்ன்னு பூ விழுந்ததுன்னா இல்லைன்னும் பதில் எழுத ஆரம்பிக்கிறாரு.
அரை மணி நேரத்துல இந்த மாதிரி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி முடிச்சிடறாரு. அதுக்கப்புறம் பாத்தா திடீர்னு டென்சன் ஆகிடறாரு. வேர்த்து விறுவிறுத்து போயிடறாரு.
பரிட்சை ஹால்ல இருந்த வாத்தியாரு சர்தார்ஜி கிட்ட வந்து "என்னப்பா என்னாச்சு? ஏன் டென்சனா இருக்கே?"ன்னு கேட்டாராம்.
அதுக்கு சர்தார்ஜி சொல்றாராம்" சார்! நான் முதல் அரை மணி நேரத்துலயே பதில் எல்லாம் எழுதி முடிச்சிட்டேன்... ஆனா இப்ப எழுதுன பதில் எல்லாம் சரியான்னு அதே மாதிரி காசை சுண்டி போட்டு சரி பாத்துட்டு இருக்கேன்"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 105 | 106 | 107 | 108 | 109 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்னப்பா என்னாச்சு? ஏன் டென்சனா இருக்கே? - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், பதில், jokes, டென்சனா, என்னாச்சு, இருக்கே, என்னப்பா, மாதிரி, ", எல்லாம், போட்டு, நகைச்சுவை, சிரிப்புகள், பரிட்சை, அதுக்கப்புறம், சுண்டி