கணவன் மனைவி ஜோக்ஸ் 10 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?
கணவன் : ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?
மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.
-***-
மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?
கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?
-***-
கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
மனைவி : நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
-***-
மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."
-***-
கணவன் : "வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல"
மனைவி : "தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 25 | 26 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 10 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், ", jokes, சிரிப்புகள், அம்மா, உங்க, என்ன, கல்யாணத்தன்னிக்கு, நகைச்சுவை, kadi, பாட்டில், நம்ம