ஜென் கதைகள் - முரட்டுக் குதிரை
பக்கத்து ஊர்களில் வசித்த மக்கள் பலரும் அருகில் உள்ள நகரத்தில் இருந்த சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்குவதும் தங்களிடம் உள்ளப் பொருட்களை விற்பதுமாக இருந்தனர். மாதத்தில் ஒரு நாள் "சந்தை நாள்" என்று மிகவும் விசேஷமாக இருக்கும். பல குறுகியத் தெரு வழியாக கடந்து தான் சந்தை இருக்கும் பெரிய வெட்ட வெளியை மக்கள் அடைய முடியும்.
ஒரு சந்தை நாளில் மக்கள் மேலும் செல்ல முடியாமல் குறுகிய தெரு ஒன்றில் நின்று கொண்டிருந்தனர். பலர் சிறு சிறு குழுவாகத் தங்களுக்குள் அடுத்து என்ன செய்வது என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். யாரோ ஒருவன் குறுகிய சந்தின் முனையில் குதிரை ஒன்றினைக் கட்டி வைத்திருந்தான். பழக்கப் படுத்தப் படாத முரட்டுக் குதிரையானது மிகவும் அக்ரோஷத்துடன் நின்று கொண்டிருந்தது. மக்கள் அந்தக் குறுகிய வழியினைக் கடந்துதான் சந்தையின் உள்ளே நுழைய முடியும். ஆனால் பழக்கப் படுத்தாத குதிரையானது கும்பலைப் பார்த்ததும் மிரண்டு தன்னுடைய பொருமையை இழந்து அங்கும் இங்கும் கட்டிய இடத்துக்குள் நடந்து கொண்டிருந்தது.
மக்களுக்கு அந்தக் குதிரைக் கடந்து செல்வதற்கு பயமாக இருந்தது. பாதுகாப்பில்லாத அந்த வழியில் சென்றால் தங்களை குதிரை கடித்து விடுவதற்கோ அல்லது காலால் எட்டு உதைக்கவோ கூடும் எனவே எப்படி அந்தக் குதிரையை அங்கிருந்து அகற்றுவது என்று ஆளாலுக்கு பேசிக் கொண்டிருந்தனர். ஒருவன் "அந்தக் குதிரை துப்பாக்கியால் சுடவேண்டும்", மற்றொருவன் "என்னிடம் பெரிய கயிறு இருந்தால், குதிரை இழுத்துக் அந்தக் கட்டடத்துடன் கட்டிப் போடுவேன்", அடுத்தவன் "பச்சை வில்லோ மரத்திலிருந்து செய்யப் பட்ட கவை போன்ற அமைப்புடைய கழி இருந்தால் என்னால் அந்தக் குதிரையை அடக்க முடியும்" என்றான்.
மக்கள் அப்பொழுதுதான் அந்த வழியாக வந்த முதிய ஸென் ஆசிரியரைக் கவனித்தனர். இந்த ஸென் ஆசிரியருக்கு ஊரில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவருடைய அறிவுத் திறமையைக் கண்டு எல்லாருக்கும் அவர் மேல் நல்ல நம்பிக்கை இருந்தது. தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவரிடம் சென்றுதான் அறிவுரைக் கேட்பார்கள். எப்படியும் இந்த முதிய ஸென் ஆசிரியருக்கு என்ன செய்வது என்று தெரியும் என்று அவர் உள்ளே வருவதற்கு நன்றாக வழிவிட்டு அனைவரும் இரண்டாக பிரிந்து நின்றனர். பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு குதிரை இருக்கும் இடத்தினைக் காட்டினர். மக்கள் "அடுத்தது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று முதியவரைப் பார்த்துக் கேட்டனர்.
முதியவர் எதுவும் பதில் கூறாமல், வந்த வழியேத் திரும்பினார், கொஞ்சம் தூரம் நடந்து சென்றவர் பக்கத்திலிருந்த மற்றொரு குறுகிய வழியாக புகுந்து சந்தைக்குள் சென்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முரட்டுக் குதிரை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அந்தக், ", மக்கள், குதிரை, குறுகிய, சந்தை, ஸென், இருக்கும், என்ன, கொண்டிருந்தனர், வழியாக