முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர்
ஜென் கதைகள் - பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர்

ஆழமான தன்னொளி பெற்ற ஸாட்ஸுஜோ தன்னுடைய பேத்தி இறந்த போது அவளால் தன்னுடைய துக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.
அதே ஊரில் வசித்த ஒரு கிழவர் அதை பொருத்துக் கொள்ள முடியாமல் நயமாக, "எதற்காக இந்த அளவிற்கு துக்கப் பட்டு கண்ணீர் வடிக்கிறாய்? ஊரில் இருக்கும் மற்றவர்கள் இதனைப் பார்த்து 'எதற்கு புகழ் பெற்ற ஸென் ஆசிரியர் காகுயினிடம் பயிற்சி பெற்று தன்னொளி பெற்ற இந்தக் கிழவி தன்னுடைய பேத்தியின் மறைவிற்காக இப்படி அழுது புலம்பி ஒப்பாரி வைக்கிறது என்று கேட்பார்கள்?' நீ துக்கத்தினை மறந்து மனதினை தேற்றிக் கொள்ள வேண்டும்" என்று எடுத்துக் கூறினார்.
அதைக் கேட்ட ஸாட்ஸுஜோ அந்தக் கிழவனை ஒருமுறை உற்று பார்த்து விட்டு "ஏ மொட்டைத் தலைக் கிழவா, உனக்கு என்னத் தெரியும்? அழகான பூக்களை தூவுவதோ, நறுமணப் பொருட்களை சுற்றி வைப்பதோ, மெழுகு வர்த்தி மற்றும் விளக்கினை ஏற்றி வைப்பதை விட என்னுடைய கண்ணீரும், புலம்பலும் தான் என்னுடைய பேத்தியின் ஆத்மாவை சாந்தமாக்கும்" என்று கோபமாக கத்தி திட்டி விட்டு மறு படியும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - கொள்ள, தன்னுடைய, பெற்ற