ஜென் கதைகள் - புரியவில்லை

எதை புரிந்தாலும் புரியாவிட்டாலும்.. எந்த நிலையில் இருந்தாலும்.. அந்த நிலையே நீ அடைந்த நிலை.
பல வருடங்கள் பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் ஆசிரியர் டைனின் காடாகிரி ரோஸியிடம் வந்து "நீங்கள் முன்பெல்லாம் சொற்பொழிவு ஆற்றும் போது ஏதோ புரியும் படி இருக்கும், ஆனால் இப்பொழுது எல்லாம் நீங்கள் பேசுவது என்ன என்றே புரிய வில்லை" என்று கூறினான்.
ஆசிரியர் காடாகிரி அசட்டுத் தனமான முகத்துடன் சிரித்துக் கொண்டே, "கடைசியாக, நீ எதையோ புரிந்து கொள்வது போல் தெரிகிறதே" என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புரியவில்லை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் -