முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » ஏற்றுக் கொள்ளாத அன்பளிப்பு
ஜென் கதைகள் - ஏற்றுக் கொள்ளாத அன்பளிப்பு
ஒரு கிராமத்தில் வயதான போர் வீரரும் ஸென் ஆசிரியருமான ஒருவர் வசித்து வந்தார். முதுமையை அடைந்து இருந்தாலும் சண்டையில் யாரையும் எளிதில் வெல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அவருடைய பொருமையும் பெருமையும் சுத்து வட்டாரங்களில் இருந்த கிராமங்களிலும், நகரங்களிலும் பரவி இருந்தது. பல மாணவர்கள் அவரிடம் சேர்ந்து போர்ப் பயிற்சிகளைக் கற்று வந்தனர்.
ஒரு நாள் வாலிப வயதுடைய போர் வீரன் ஒருவன் அந்தக் கிராமத்திற்கு வந்தான். அவன் முதிய வயதினரான ஆசிரியரை எப்படியும் வலுச்சண்டைக்கு அழைத்து அவரை முதன்முதலாக வென்றவன் என்ற பட்டத்தினைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு எதிரியிடம் இருக்கும் குறைபாட்டினை எளிதில் அறிந்து கொள்ளும் திறமையும், இடியைப் போன்ற வேகத்துடன் மின்னெலென கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து தாக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தான். கருணையே இல்லாத அவன் எதிரியினை வெகு நேரம் உற்று நோக்குவான், எதிரி முதல் அடியை எடுத்து வைக்கும் வரையில் அவர்களை கூர்ந்து நோக்குவான். எதிரி முதல் அடியை எடுத்து வைத்ததும் எதிரியினுடைய சண்டைத் திரனில் உள்ள குறைபாட்டினை அறிந்து உடனடியாக தன்னுடைய ஆற்றைலை எல்லாம் ஒருமுகப் படுத்தி எதிரியைத் தாக்கிக் கொல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இதுவரை இந்த வாலிபனிடம் அவனுடைய முதல் இடியென தாக்கும் அடியிலிருந்து யாரும் உயிர் தப்பிப் பிழைத்தது இல்லை.
தன்னுடைய மாணவர்கள் பலரும் இந்த கெட்ட நோக்குடைய வாலிப போர் வீரனைப் பற்றி சொல்லித் தடுத்த போதும், முதிய ஸென் ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சியுடன் இளைஞன் விட்ட சவலான சண்டைக்கு ஒத்துக் கொண்டார். இருவரும் போர் செய்யும் இடத்திற்கு சென்றனர். ஊர் மக்களும் மாணவர்களும் சண்டையினைப் பார்ப்பதற்காக சுற்றி நின்று கொண்டிருந்தனர். சண்டை ஆரம்பித்த உடனேயே வாலிப போர் வீரன் ஆசிரியரை ஜப்பானிய மொழியில் இருந்த இழிவான வார்த்தைகளை எல்லாம் உபயோகப் படுத்தி திட்ட ஆரம்பித்தான். கீழே இருந்த குப்பைக் குளங்களை அள்ளி ஆசிரியர் மேல் வீசினான். அவருடைய முகத்தில் படுமாறு காரி உமிழ்ந்தான். ஒரு மனிதனை எதை எதையெல்லாம் செய்தால் அவமானப் படுத்த முடியுமோ அத்தனை விதமான செயல்களையும் செய்தான். வார்த்தைகளை உபயோகப் படுத்தி கோபமுட்டும் படி பேசி சாபமிட்டான். இப்படியாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் சென்றிருக்கும். ஆனால் ஸென் ஆசிரியர் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக உறுதியுடன் நின்றிருந்தார். கடைசியில் வார்த்தைகள் கிடைக்காமல் இளைஞன் சோர்வடைந்து, தன்னுடைய திட்டம் பலிக்காமை கண்டு, முதியவரை வெல்வது கடினம் என்று நினைத்து அவமானத்துடன் அந்த இடத்தினை விட்டு சென்று விட்டான்.
முதிய ஆசிரியர் இளைஞனின் எல்லா விதமான அவமானமான செயலுக்கும் கோபமே படாமலும் பதிலே தராமலும் சண்டையிடாமலும் அமைதியாக நின்றிருந்ததைப் பார்த்த மாணவர்கள், ஆசிரியரை சூழ்ந்து கொண்டு கும்பலாக ஒரே நேரத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
"எப்படி நீங்கள் இப்படிப் பட்ட அவமானமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு அமைதியாக நிற்க முடிந்தது? எதனால் அந்த கேடுகெட்ட இளைஞன் சண்டையிடாமலேயே இங்கிருந்து ஓடிவிட்டான்?"
"யாரோ ஒரு விருந்தினர் உன்னைப் பார்க்க வருகிறார், வருகிறவர் உனக்கு ஒரு பொருளை அன்பளிப்பாகத் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம், நீ அதனை பெற்றுக் கொள்ளவில்லை எனில் அந்த அன்பளிப்பு யாரைச் சேரும்?" என்று கேட்டார் ஸென் ஆசிரியர்.
அனைவரும் ஒரே குரலில், "வந்த விருந்தினரையேச் சேரும்" என்று கூறினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏற்றுக் கொள்ளாத அன்பளிப்பு - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ஆசிரியர், ", போர், அந்த, ஸென், இளைஞன், விதமான, அமைதியாக, இருந்த, படுத்தி, முதிய, ஆசிரியரை, மாணவர்கள், தன்னுடைய, வாலிப