முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » அப்படியானால் நீயே வைத்துக் கொள்
ஜென் கதைகள் - அப்படியானால் நீயே வைத்துக் கொள்

சென் துறவி ஒருவர் தனது 60வது வயதில் தான் ஜென் தத்துவங்களைப் படிக்க ஆரம்பித்தார். தனது 80வது வயது வரை படித்தார். பின்னர் தான் காலமான 120ம் வயது வரை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.
அந்த துறவியிடம் மாணவன் ஒருவன்…
ஒரு மாணவன், ‘குருவே, என் மனதில் எதுவுமே இல்லையென்றால் என்ன செய்வது?’ என்றான்.
குரு, ‘அதைத் தூக்கி எறிந்து விடு’, என்றார்.
மீண்டும் அவன், ‘என்னிடம் தான் எதுவுமே இல்லையே? எப்படித் தூக்கி எறிவது?’ என்றான்.
குரு மீண்டும், ‘சரி, அப்படியானால் நீயே வைத்துக் கொள்’ என்றார்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
அப்படியானால் நீயே வைத்துக் கொள் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - தான்