ஜென் கதைகள் - அப்படியா,சேதி !

ஹாக்கின் ஒரு ஜென் ஞானி. அவர் குடிசைக்கு அருகில் அழகிய ஜப்பானியப் பெண் தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். திடீரென அவள் கர்ப்பமானாள். பெற்றோர் பதறினர். குழந்தைக்குத் தகப்பன் யார் என அவள் கூற மறுத்தாள். மற்றவர் வற்புறுத்தலால் ஹாக்கின் தான் காரணமென்று கூறி விட்டாள்.
பெற்றோர் ஜென் ஞானியிடம் சென்று கோபப்பட்டு கத்தினார்கள். அவர் அமைதியாக, ""அப்படியா,சேதி !'' என்று மட்டுமே கூறினார்.
குழந்தை பிறந்ததும் ஹாக்கின் அதனை எடுத்து வளர்த்து வந்தார். இதனால் அவருக்குக் கெட்டபெயர் உண்டாயிற்று. ஆனால், அவர் கவலைப்படவில்லை ! குழந்தைக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுத்து பாதுகாத்து வந்தார். ஓராண்டு சென்றது. குழந்தையின் தாய், அந்தக் குழந்தையின் தகப்பன் உள்ளூர் மீன் அங்காடியில் வேலை செய்பவன்தான் என்ற உண்மையைத் தன் பெற்றோர்களிடம் கூறினாள்.
பெண்ணின் பெற்றோர் ஹாக்கினிடம் சென்று தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அவர் ""அப்படியா, சேதி !'' என்று கூறிவிட்டு, குழந்தையைத் திரும்பக் கொடுத்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அப்படியா,சேதி ! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", அவர், ஹாக்கின், பெற்றோர்