ஜென் கதைகள் - ஒவ்வொரு நிமிடமும் ஸென்
ஒவ்வொரு ஸென் மாணவர்களும் தங்களுடைய குருவிடம் குறைந்த பட்சம் பத்து வருடங்களாவது பயிற்சி பெறுவார்கள். அதற்குப் பின்பே அவர்கள் ஸென் பற்றி மற்றவர்களுக்கு சொல்லித் தர அனுமதிக்கப் பட்டார்கள்.
டென்னோ என்ற மாணவன் ஸென்னை முறையாக கற்று ஸென் பட்டம் பெற்று சமிபத்தில் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன். அடை மழை பெய்யும் ஒரு நாள் டென்னோ தன்னுடைய மரத்தினால் ஆன பாதுகைகளை (செருப்புக்களை) போட்டுக் கொண்டு குடையை விரித்து பிடித்துக் கொண்டு நா-நினைச் சந்திப்பதற்காக அவருடைய மடத்திற்கு சென்றான். டென்னோவினை முக மலர்ச்சியுடன் வரவேற்ற நா-நின் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, "நீங்கள் வரும் போது போட்டுக் கொண்டு வந்திருந்த மரப்பாதுகைகளை நடையில் உள்ள வராண்டாவின் ஒரத்தில் விட்டு விட்டு வந்திருப்பீர்கள்.
உங்களுடைய குடையானது மரப்பாதுகைகளுக்கு வலப் பக்கத்தில் உள்ளதா அல்லது இடப் பக்கத்திலா?" என்ற கேள்வியினைக் கேட்டார்.
குழப்பம் அடைந்த டென்னோ எந்த பதிலும் சொல்ல முடியாமல் திகைத்தான்.
அப்பொழுதான் அவனுக்கு தன்னால் ஸென்னினை ஒவ்வொரு நிமிடமும் கடைபிடிக்க முடியவில்லை என்பதினை உணர்ந்தான்.
உடனே ஆசிரியருக்கு நன்றி கூறிவிட்டு அவரிடமே மாணவனாகச் சேர்ந்தான். ஒவ்வொரு நிமிடமும் ஸென்னைக் கடைபிடிப்பதற்கு டென்னோவிற்கு ஆறு வருடங்கள் பிடித்தது. ஆறு வருடங்கள் முடிவில் டென்னோவினால் நா-நின் சொன்ன ஸென்னின் அனைத்துப் பரினாமங்களையும் உணர்ந்து தெளிந்து கொள்ள முடிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒவ்வொரு நிமிடமும் ஸென் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - விட்டு, கொண்டு, டென்னோ, ஸென், ஒவ்வொரு