முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » குறைமனதோடு எதையும் செய்யாதே!
ஜென் கதைகள் - குறைமனதோடு எதையும் செய்யாதே!
ஓவியரான ஒரு ஜென் குரு தன்னுடைய சீடரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்.சீடரும் அவ்வப்போது ஓவியத்தை விமரிசித்துக் கொண்டிருந்தார்.குரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஓவியம் சரியாக வரவில்லை.சீடரும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது வண்ணப்பொடிகள் தீரும் நிலையில் இருந்ததால் குரு சீடரை வண்ணப்பொடிகள் வாங்கி வர அனுப்பினார்.சீடர் வெளியே சென்றார்.குருவும் இருக்கும் வண்ணங்களைக் கொண்டு ஓவியத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.வெளியே போய் வந்த சீடர் வந்ததும் அசந்து விட்டார்.குரு மிக அற்புதமாக ஓவியத்தை முடித்து வைத்திருந்தார்.
உடனே ஆச்சரியப்பட்ட சீடரோ இது எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த குரு, பக்கத்தில் ஒரு ஆள் இருந்தாலே ஒரு படைப்பு ஒழுங்காக உருவாகாது.உள்ளார்ந்த அமைதி உண்டாகாது. சிறப்பாக அமைய வேண்டும் என்ற நினைப்பே சிறப்பாக இல்லையோ என்ற குறைபாட்டை ஏற்படுத்தி விடும்.
குறைபாடு என்ற நினைவே ஒரு குறைபாடுதான்.அது இருக்கும்வரை முழுமைத்தன்மை வராது. குறை மனதோடு எதையும் அணுகக்கூடாது.இயல்பாகச் செய்யும் செயலே முழுமையைத் தரும் என்று கூறினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறைமனதோடு எதையும் செய்யாதே! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - குரு, கொண்டிருந்தார், ஓவியத்தை