முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » மவுனத்தை விட சிறந்தது எது?
ஜென் கதைகள் - மவுனத்தை விட சிறந்தது எது?
தாவோ மடாலயங்களில் ஒரு பழமையான விதிமுறை இருந்தது. ‘ மவுனத்தை விட சிறப்பாகப் பேச முடியும் என்றால் பேசு.'
ஒரு வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருக்க, குரு பாடம் நடத்தாமல் மவுனமாக இருந்தார். நேரம் ஓடியது எங்கும் நிசப்தம். அப்போது அருகில் இருந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று மவுனத்தைக் கலைப்பது போல கிறீச்சிட்டு கூவியது. அது எல்லோர் காதிலும் விழுந்தது. அதை குரு கவனித்தார்.
‘அவ்வளவுதான். இன்றைக்கு பாடம் முடிந்தது'. என்று சொல்லிவிட்டு எழுந்து போனார்.
நீதி : சொல்லித் தெரிவதல்ல ஜென். சொல்லப்படுவதல்ல ஜென். சொல்லுக்கடங்காதது ஜென். மகத்தான விசயங்கள் எல்லாமே அப்படித்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மவுனத்தை விட சிறந்தது எது? - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ஜென்