ஜென் கதைகள் - தியானத்தில் பூனை
ஒரு ஊரில் ஆன்மீக மாஸ்டர் இருந்தார். அவர் தினமும் மாலையில் தனது சீடர்களுடன் சேர்ந்து, தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அவர் தியானம் செய்கையில், அங்கு இருக்கும் ஒரு பூனை அவர் பக்கத்தில் வந்து சப்தம் எழுப்பி, அவரது தியானத்திற்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. அதனால் அவர் மாலை வேளையில் அந்த பூனையை தியானம் செய்யும் போது மட்டும் கட்டிப் போடுமாறு உத்தரவிட்டார்.
ஆண்டுகள் கழித்து அந்த மாஸ்டர் இறந்துவிட்டார். இருப்பினும் அவரது சீடர்கள் தியானம் செய்யும் போதெல்லாம், அந்த பூனையை கட்டிப் போட்டே தியானம் செய்வார்கள். சில நாட்கள் கழித்து அந்த பூனையும் இறந்துவிட்டது. இருப்பினும் அவர்கள் மற்றொரு பூனையை கொண்டு வந்து கட்டிப் போட்டு தியானம் செய்தார்கள்.
மேலும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அந்த மாஸ்டரின் வம்சாவளிகள் தியானம் செய்யும் போதெல்லாம் பூனையை கட்டிப் போட்டு தியானம் செய்வதை பரம்பரை வழக்கமாக கொண்டுவிட்டனர்.
இக்கதையில் இருந்து, அந்த மாஸ்டர் எதற்கு அந்த பூனையை கட்ட சொன்னார் என்று தெரியாத அந்த சீடர்கள், அவர் கூறிய ஒரு காரணத்தினால் அதனை தொடர்ந்து வந்து, பரம்பரை வழக்கமாக்கிக் கொண்டனர். ஆகவே "எதை செய்யும் போதும் எதற்கு செய்ய வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு பிறகு செய்ய வேண்டும்" என்பது நன்கு புரிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தியானத்தில் பூனை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அந்த, தியானம், பூனையை, அவர், கட்டிப், செய்யும், வந்து, மாஸ்டர்