ஜென் கதைகள் - உடைந்த கோப்பை
ஒரு ஊரில் ஒரு ஜென் துறவி இருந்தார். அவரிடம் சீடனாக ஒரு குறும்புக்கார பையன் இக்யூ சேர்ந்தான். அவன் மிகவும் புத்திசாலி. ஒரு நாள் அந்த சிறுவன் இக்யூ, துறவிக்குப் பிடித்த ஒரு கோப்பையை எடுத்து பார்த்தான். அப்போது எதிர்பாராத விதமாக கோப்பையானது உடைந்துவிட்டது. சொல்லப் போனால், அந்த கோப்பையானது மிகவும் விலைமதிப்பற்றது. அந்த கோப்பை துறவிக்கு மிகவும் விருப்பமானது.
அப்போது துறவி வரும் சத்தம் கேட்டது. உடனே அந்த சிறுவன் இக்யூ, கையில் இருந்த உடைந்த கோப்பையை பின்னால் மறைத்து வைத்தான். பின் அவன் துறவியிடம், "ஏன் மக்கள் அனைவருக்கும் இறப்பு ஏற்படுகிறது?" என்று கேட்டான்.
அதற்கு துறவி, "அது இயற்கையான ஒன்று. உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது உண்டு." என்று சொன்னார். அப்போது உடனே அந்த சிறுவன் அந்த உடைந்த கோப்பையை நீட்டி "உங்கள் கோப்பைக்கும் இறப்பு வந்துவிட்டது" என்று கூறினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடைந்த கோப்பை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அந்த, ", அப்போது, இறப்பு, கோப்பையை, சிறுவன், இக்யூ, மிகவும், துறவி