ஜென் கதைகள் - குரு நாற்காலி!!!

ஒரு ஊரில் ஜென் மாஸ்டர் ஒருவர் இருந்தார். அவருடன் 20 வருடங்களாக, அவரது சீடன் ரின்சாய் என்பவன் இருந்தான். ஒரு நாள் ரின்சாய் மாஸ்டர் அமரும் இருக்கையில் அமர்ந்தான். அப்போது அங்கு வந்த மாஸ்டர், ரின்சாய் தனது இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு, எதுவும் கோபப்படாமல் அமைதியாக ரின்சாயின் இருக்கையில் அமர்ந்தார்.
சிறிது நேரம் அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, ரின்சாய் மாஸ்டரிடம் "நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? நான் உங்களை அவமதித்துவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? நான் நன்றி கெட்டு நடப்பதாக நினைக்கிறீர்களா?" என்று கேட்டான்.
அதற்கு மாஸ்டர் சிரித்துவிட்டு "நீ முதலில் மாணவனாக இருந்து சீடனாக ஆனாய், இப்போது சீடனாக இருந்து மாஸ்டராக ஆக தகுதி உடையவனாக இருக்கிறாய். மேலும் என் வேலைகளை பகிர்ந்து கொள்ள நீ தகுதியுடையவனாகிவிட்டாய் என்பதை நினைக்கும் போது, எனக்கு பெருமையாகத் தான் உள்ளது. எனக்கு முன்பே அவை நடக்கும் என்பதும் நன்றாக தெரியும்" என்று கூறினார்.
ஆகவே தகுதியுடையோர் இகழ்ச்சி அடையார்..!!
தேடல் தொடர்பான தகவல்கள்:
குரு நாற்காலி!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - மாஸ்டர், ரின்சாய், ", இருக்கையில்