முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » எவரையும் இழிவாக நினைக்க கூடாது!!!
ஜென் கதைகள் - எவரையும் இழிவாக நினைக்க கூடாது!!!
ஒருமுறை இக்கியு என்கிற ஜென் துறவியை பணக்கார வாடிக்கையாளர்களில் ஒருவன் விருந்துக்கு அழைத்தான். ஆகவே இக்கியு தான் வழக்கமாக அணியும் உடையில் அந்த விருந்துக்கு சென்றார். அப்போது அங்கு வெளியில் இருந்த பணக்காரன், அவரை துரத்தி அனுப்பினான்.
பின்னர் ஜென் துறவி மீண்டும் வீட்டுக்கு சென்று, ஊதா வண்ணத்தில் பட்டு உடையை அணிந்து, அந்த பணக்காரன் வீட்டின் விருந்துக்கு சென்றார். அதுமட்டுமல்லாமல், அழகான மேலங்கியை மேலே போர்த்தி சென்றார்.
இம்முறை இக்கியுவை மிகுந்த மரியாதையுடன், அந்த பணக்காரன் பெருவிருந்துக்கு வரவேற்று அவரை ஒரு இருக்கையில் அமர்த்தினான். அந்த பணக்காரணன் இக்கியுவை அழகான மேலங்கியுடன் காணப்பட்டதின் காரணமாக, அவரை மரியாதையுடன் வரவேற்றதால். இக்கியு அந்த உடையை கழற்றி இருக்கையில் வைத்து விட்டு " நீங்கள் இந்த உடையை மட்டுமே விரும்பினீர் என நினைக்கிறேன். ஏனெனில் நான் சாதாரண உடையில் வந்த போது என்னை துரத்தி விரட்டினீர்" என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.
ஆகவே நாம் ஒருவரை விருந்துக்கு அழைக்கும் போது, அவரின் மேல் அலங்காரத்தை வைத்து எடை போடாமல், அவர் மனதை புரிந்து சிறப்போடு வரவேற்பதே சிறந்த பண்பு. மேலும் அன்போடும் பண்போடும் நடந்தால் எத்தனை மேன்மையானவர்களின் அன்பையும் எளிதில் பெறலாம் என்பதை இந்த கதை நன்கு கூறுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எவரையும் இழிவாக நினைக்க கூடாது!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அந்த, விருந்துக்கு, உடையை, அவரை, சென்றார், இக்கியு, பணக்காரன்